விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை.
சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் -
திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே -
உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன் -
சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு ;-
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன் .-
இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன் ;-
இந்த தகவல் ஆசிரம பாமாலையில் இருந்தது :-
ReplyDeleteமதுரை ஜில்லாவில் போதகராயிருந்த சந்தியாகு ஐயர் ஆங்கிலத்தில் அருமையான பல பாட்டுகளை, தமிழ் காவிய முறைமை தழுவி மொழிபெயர்த்து தமிழ் நாகத்திலேயே பாடியிருக்கிறார். இது தமிழ் கிறிஸ்தவர்களின் பக்திவர்த்திக்கு மிக உதவியதுமில்லாமல் இதர பாஷையிலுள்ள பாட்டுகளை நமது பாஷையில் மொழி பெயர்பவர்களுக்கு நல்ல முன்மாதிரி. இப்பக்தன் சிறிது காலத்துக்கு முன் திடீரென்று இம்மயை விட்டுப் பிரிந்தார். இந்தப் பாட்டின் மூல ஆங்கிலப் பாட்டு மகாத்மா காந்தியவர்களூக்கு மிகப்பிரியமம். அவர் 21-நாள் உபவாசமிருந்து முடித்தபின் முதல் தடவை ஆகாரம் கொள்ளும் முன் அவர் கேட்டுக் கொண்டபடி சி.எப். அந்திரேயா ஐயரவர்கள் இந்த பாட்டை ஆங்கலத்தில் பாடினார்.
இராகம்- பைரவி தாளம்- ரூபகம்
இந்த பாடலின் ஆங்கில மூலம் "WHEN I SURVEY THE WONDROUS CROSS" ஆகும். மேலும் இது தமிழ் பாமாலையில் "என் அருள் நாதா இயேசுவே" என்ற பாடலாக உள்ளது.
ReplyDeleteவிந்தை கிறிஸ்தேசு ராசா எனக்கு மிகவும் பிடித்த கீர்த்தனைப் பாடலாகும். அதன் வரிகளும் அதன் இராகமும் மிக இனிமையானவை.