Friday, October 30, 2009

கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35

பல்லவி

கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று

அனுபல்லவி

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண்

சரணங்கள்
பெத்தலேம் -சத்திர முன்னணையில்
உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண்

தேவாதி -தேவனை, தேவசேனை
ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்

பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,
ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண்

முத்தொழிற் -கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்

மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,
விண்ணோரும் -வேண்டி நிற்கும் வின்மநியைக் , கண்மணியைக் -கண்

அண்டினோர்க் -கன்புருவாம் ஆரணனை ,
கண்டோர்கள் -கவிதீர்க்கும் காரணனை,பூரணனைக் -கண்

அன்னையாம் -கன்னியும் ஐயனுடன்
முன்னறி -யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்- கண்
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை
நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத்

எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்

வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ ,
ஆனா பல் கந்தை என்ன பாடோ ?-பெத்

அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி ,
இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்

ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு ,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு ,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்

ஆதி பிதா குமாரன் -கீர்த்தனை 10

பல்லவி
ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.அனுபல்லவி

நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
நிறைந்த சத்திய ஞான மனோகர
உறைந்த நித்திய வேதா குணாகர,
நீடு வாரி திரை சூழ மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி


சரணங்கள்
எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர் ,
துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து ,
தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி

மங்களம் ஜெயமங்களம்! கீர்த்தனை 319

பல்லவி

மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!

ச்ரணங்கள்

எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்

நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்

சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்

இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்