Monday, August 31, 2009

வேளை இது சபையே கீர்த்தனை 125

பல்லவி

வேளை இது சபையே -நித்திரையை
விடு எழுந்திருக்க -நல்ல

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை

சரணங்கள்

நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே ,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை

பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை

தானவனாலயமே- உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல்
மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை

கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே கீர்த்தனை 178

பல்லவி

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறை உண்டு நீ சொல் ,மனமே

சரணங்கள்

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல் குயர்ந்தோர்,உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுக பத்திர மருளும் -என்

பாபமோ ,மரணமோ ,நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ,ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமோ தீர்த்தோர் சற்குரு நாதன் ;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே மகிழாய் .--என்

ஆசி செய்திடுவார் ,அருள் மிக அளிப்பார்
அம்பரந்த் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் ;முன்னமே நடப்பார்
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும் -என்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் ,
கடைசி மட்டும் கைவிடா திருப்பார் ;
பவமன்னிப்பளிப்பார்,பாக்கியங் கொடுப்பார்
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் -என்

போனது போகட்டும், புவி வசை பேசட்டும் ,
பொல்லான் அம்புகள் எய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் ,அருள் மழை பெய்திடும் ,
அன்பு மிகும பேரின்ப மெனக்கருள் -என்

வீராதி வீரர் இயேசு சேனை கீர்த்தனை 229

வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .

திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .

அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .

சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .

ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.

விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .

பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்

Sunday, August 30, 2009

உன்னையன்றி வேறே கெதி கீர்த்தனை 326

பல்லவி

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமி!

அனுபல்லவி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! - ஆசை என் யேசு ஸ்வாமீ!- உன்னை

சரணங்கள்

பண்ணின துரோகமெல்லாம்- எண்ணினா லெத்தனை கோடி
பாதகத்துக்குண்டோ எல்லை -பர தவித்தேனே தேடி ,
கண்ணினாலுன் திருவடிக் -காண நான் தகுமோ தான்?
கடையனுக்கருள் புரி -மடியுமுன் யேசு ஸ்வாமீ! - உன்னை

அஞ்சியஞ்சித் தூர நின்றென்- சஞ்சலங்களை நான் சொல்லி ,
அலைகடல் துரும்பு போல்- மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த -வஞ்சகன் முகம் பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து -க்ருபை வை யேசு ஸ்வாமீ! -உன்னை

எத்தனை கற்றாலும் தேவ -பக்தி யேது மற்ற பாவி ,
எவ்வளவு புத்தி கேட்டும் -அவ்வளவுக்கதி தோஷி
பித்தனைப் போல பிதற்றிக் -கத்தியே புலம்புமேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப்- பிழைக்கவை யேசு சுவாமீ ! -உன்னை

கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டா லாவதென்ன ?
கல்லைப் போல் கடினங் கொண்ட - கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன்-உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் -உருக வை யேசு ஸ்வாமீ -உன்னைThursday, August 6, 2009

எங்கே சுமந்து போகீறீர்

பல்லவி
எங்கே சுமந்து போகிறீர், சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர் ?

சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர், இந்த கானலில் உமது
அங்கம் முழுவதும் நோக, ஐயா ஏன் இயேசு நாதா- எங்கே.

தோளில் பாரம் அழுத்த, தூக்க பெலம இல்லாமல்
நாளும் தத்தளிக்கவே , தாப சோப உற, நீர்- எங்கே

வாதையினால் உடலும் வாடி தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாக தாங்கி வர- எங்கே

தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர- எங்கே

வல்ல பேயை கொல்லவும், மரணந் தன்னை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே

மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்கா சுமையை எடுத்து- எங்கே