Saturday, June 27, 2009

யேசு ராசா எனை ஆளும் நேசா கீர்த்தனை 159

பல்லவி
யேசு ராசா -எனை-ஆளும் நேசா !

சரணங்கள்
மாசிலா மணி ஆன முச்சுடர்
மேசியா அரசே ,-மனு
வேலே, மாமறை நூலே , தேவ செங்
கோலே ,இங்கெனின் மேலே அன்பு செய் - யேசு

தாவீ தரசன் மைந்தா -நின்
சரணம் சரணம் ,எந்தா !-சதா
னந்தா வா னந்தா, உ
வந்தாள்; மிக வந்தனம் ,வந்தனம் !- யேசு

ஐயா, என் மனம் ஆற்றி ,-உன
தடிமை என்றனைத் தேற்றிக் -குண
மாக்கி ,வினை நீக்கிக் கை
தூக்கி ,மெய் பாக்கியம் கொடு -யேசு

சுத்த திருத்துவ வஸ்துவே ,-சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே ,-பரி
சுத்தனே ,கரி சித்தெனை இ
ரட்சித் தடிமை கொள் ; நிததியம் தோத்திரம் -யேசு

மங்களம் ஈசாவே, -வளம் மிகும்
சங்கையின் ராசாவே ,-நரர்
வாழ்வே ,மன் னாவே, மெய்த்
தேவே , உமக கோசன்னாவே !- யேசு

ஐயையா நான் வந்தேன் , தேவ - கீர்த்தனை 156

பல்லவி

ஐயையா, நான் வந்தேன் ;-தேவ
ஆட்டுக்குட்டி ,வந்தேன் .

சரணங்கள்

துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா


உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;
தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;
தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா


எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ !-இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,
தேவாட்டுக்குடி வந்தேன் - ஐயையா

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்துசுத்திகரித்
தென்னை அரவணையும் ;-மனம்
தேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்
தேவாடுக்குட்டி வந்தேன் -ஐயையா

மட்டற்ற உம அன்பினாலே தடை எதும்
மாறி அகன்றதுவே ,-இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி வந்தேன் - ஐயையா

Thursday, June 25, 2009

உருகாயோ நெஞ்சமே கீர்த்தனை 56

உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார் !
கரங் கால்கள் ஆணியேறித்
திரு மேனி நையுதே !


மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர் தாம் ,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குரு சேறினார்.

தாக மிஞ்சி நா வறண்டு
தங்க மேனி மங்குதே,
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்

மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய் ,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கி னார் அன்றோ ?

ஒரு மருந்தரும் குரு மருந்-து கீர்த்தனை 106

பல்லவி

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் கண்டேனே .

அனுபல்லவி

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து ,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து ,
வரும் வினைகள் மாற்றும் மருந்து
வறுமையுளோர்க்கே வாய்த்த மருந்து -குரு

சரணங்கள்

சிங்கார வனத்தில் செழித்த மருந்து ,
ஜீவ தரு மீதில் படர்ந்த மருந்து ,
அங்கு விளை பவம் மாற்றும் மருந்து ,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து -குரு

மோசே முதல் முன்னோர் காணா மருந்து ,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து ,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து -குரு

தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து ,
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து ,
மனுவை உலகினில் வந்த மருந்து - குரு

செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து ,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து ,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து -குரு

விசுவாசியின் காதில் பட கீர்த்தனை 108

பல்லவி

விசுவாசியின் காதில் பட யேசுவென்ற நாமம்

விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம் .

சரணங்கள்

பசித்த ஆத்துமாவை பசியாற்று மன்னாவதுவே ;

முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்த பெயரே .- விசு

துயரையது நீக்கிக் காயமாற்றி குணப்படுத்தும் ;

பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும் -விசு

காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும் ,

மாயை கொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும் .-விசு

எல்லை இல்லாக் கிருபைத் திரள் ஏற்று நிறைந்திருக்கும் ,

எல்லா நாளும் மாறாச் செல்வம் யேசுவென்ற பெயரே .- விசு

என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே ,முடிவே ,

என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக் கொள்ளும், தேவே .-விசு

Wednesday, June 24, 2009

ஏசுவே கிரு பாசனப்பதியே கீர்த்தனை 153

பல்லவி

யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட

இழிஞன் எனை மீட்டருள் ,

ஏசுவே,கிரு பாசனப்பதியே

சரணங்கள்

காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு

கண்டிலேன் ,சருவ வல்ல மண்டலாதிபா !

நேசமாய் ஏழைக்கிரங்கி,மோசம் அணுகாது காத்து

நித்தனே, எனைத் திருத்தி ,வைத்தருள் புத்தி வருத்தி ,-யேசு

பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் , பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் ;

தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட

தேவனே , எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி , -யேசு

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி

தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே ,

குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா ? எனைச் சதிக்கும்

குற்றங்கள் அறவே தீர்த்து ,முற்று முடியக் கண் பார்த்து ,- யேசு

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை ,

புண்ணியனே உம சரணம் நண்ணி அண்டினேன் ;

எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி ?

இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச சொரிந்து -யேசு

எத்தனை திரள் என் பாவம் கீர்த்தனை 138

பல்லவி

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே !

எளியன் மேல இரங்கையனே .

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;

நிலைவரம் எனில் இல்லை ;நீ என் தாபரமே ,-எத்

சரணங்கள்

பத்தம் உன் மேல எனக்கில்லை என்பேனோ ?

பணிந்திடல் ஒழிவேனோ ?

சுத்தமுறுங் கரம் கால்கள் ,விலாவில்

தோன்றுது காயங்கள் தூய சிநேகா!- எத்

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே

இடைவிடாதிருக்கையிலே

உந்தன் மிகுங் கிருபை ,ஓ! மிகவும் பெரிதே

உத்தம மனமுடையோய் ,எனை ஆளும் !-எத்

ஆயங் கொள்வோன் போல் ,பாவ ஸ்திரி போல்

அருகிலிருந்த கள்ளன் போல் ,

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;

நீ எனக்காகவே மரித்தனை ,பரனே !-எத்

கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன் ,

கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;

இட்டமாய் மகன் என்ப பாத்திரன் அலன் நான்

எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே ,அப்பனே ! -எத

Tuesday, June 23, 2009

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே கீர்த்தனை 333

பல்லவி

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே !

அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்,- எங்கும்

சரணங்கள்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் ;
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் .- எங்கும்

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே;
பல்வலி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் .-எங்கும்

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி ?
பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ ?-எங்கும்

சுத்த சுவிஷேசம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் -எங்கும்

இம்மட்டும் ஜீவன் தந்த கீர்த்தனை 306

பல்லவி


இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த


எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.



அனுபல்லவி


நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து


நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் .-இம்



சரணங்கள்

காலம் சொல் போல் கழியும் ,தண்ணீரைப் போல் வடியும் ,

கனாவைப் போலேயும் ஒழியும்;

வாலிபமும் மறையும் ,சீலம் எல்லாம் குறையும் ,

மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது ;

கோலப் புதுமைக்கும் , நீர் குமிழிக்கும் ,புகைகுமே

கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்

கண்டு கருணைகள் விண்டு தயவுடன் .-இம்

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;

பரம பாதையைத் தொடர்ந்தோம் ;

வலிய தீமையை வென்றோம் ;நலியும் ஆசையைக் கொன்றோம் ;

வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;

கவி என்ற தெல்லாம் விண்டோம் ;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் ;

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்

சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் .-இம்

சன தேசம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு

தந்து, நொறுங்கினதைக் கட்டிக்

கன சபையை ஆதரித் தன்பாய் ஆசிர்வதித்துக

கண்ணோக்கி எல்லார் மேல அன்றன்று

தினமும் அருள் உதிக்கச் செய்து ,தமது தேவ

மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் -இம்

Sunday, June 21, 2009

காலையில் தேவனைத் தேடு கீர்த்தனை 276

பல்லவி

காலையில் தேவனைத் தேடு ;-ஜீவ

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு .

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,

சீரான நித்திய ஜீவனை நாடு .- காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே ,-மனு

மைந்தனென நாமம் வைத்திருந்தாரே ;

உன் சிருட்டிகரை நீ உதயத்தில்லெண்ணு

உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணு .- காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு ;-கெட்ட

பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ;

ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்

சிந்தனை செய் ;மனுவேலனைப் பணிய .-காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை

செய்யா திருங்களென்றார் மனதார ;

பரலோக செல்வ மவர்க்கு பலிக்கும் ;

பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் -காலையில்

வேலையுனக்குக் கைகூட -சத்ய

வேதன் கிருபை வரத்தை மன்றாட ,

காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே ,

கண் விழித்து ஜெபஞ் செயும்மென்றரே

Thursday, June 18, 2009

பக்தருடன் பாடுவேன் கீர்த்தனை 275

பல்லவி



பகதருடன் பாடுவேன் -பரம சபை
முக்தர் குழாம் கூடுவேன்



அனுபல்லவி



அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த



சரணங்கள்



அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும் ,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த

இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே ,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த

தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில் ,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி ,
தூயா ,திருப்பாதத் தரிசனம் தந்தருள்- பக்த

என் உள்ளங் கவரும் கீர்த்தனை 170

பல்லவி
என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .

அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்

சரணங்கள்

உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்

சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்

உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்

அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்

அடைக்கலம் அடைக்கலமே கீர்த்தனை 168

பல்லவி
அடைக்கலம் அடைக்கலமே ,இயேசு நாதா ,உன்
அடைக்கலம் அடைக்கலமே !

அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுள் அடியுற்றமும் ஏழைக்கு -அடை

சரணங்கள்
ஆசையோடு பாவமத்தில் அலைந்து திரிந்தேனே ,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே ;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்ந்தருள் !-அடை

கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன் ;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே ,
கிட்டி வந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே!- அடை

சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும் ;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே!-அடை

என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தாயல்லவோ

Monday, June 15, 2009

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா? கீர்த்தனை 72

பல்லவி

என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்

சரணங்கள்

பரகதி திறந்து பாரினில் பிறந்து ,

நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்

ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,

சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்

மாசிலா நாதன் மாமறை நூலன் ,

ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்

Thursday, June 11, 2009

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே கீர்த்தனை 16.

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே ,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே ,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !

பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே ,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே ,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !

மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே

Saturday, June 6, 2009

பாவியாகவே வாறேன் கீர்த்தனை 155

பல்லவி
பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன் .

சரணங்கள்
பாவக்கறை போமோ என் பாடால் ? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் -பாவி

நீ வா உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே ;
தேவா , உன் வாக்கை நம்பி சீர்கேடன் நீசனும் நான் -பாவி

பேய் மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் -பாவி

ஜீவ செலவ ஞான சீல சுகங்கள் அற்றேன் ,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் -பாவி

துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர் ;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் -பாவி

உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றியே தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல உயிர் அடைந் தோங்கவே நான் -பாவி

சுந்தர பரம தேவ மைந்தன் கீர்த்தனை 86

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் ;நமை ஒன்றாய் கூட்டினார் ;அருள் முடி
சூட்டினார் ;கிருபையால் தேற்றினாரே ,துதி- சுந்

சரணங்கள்

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே ,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் ;-பவத் துயர்
போடுங்கள் ;-ஜெயத்தைக் கொண்
டாடுங்கள்; துதி சொல்லிப் பாடுங்கள் ,பாடுங்கள் என்றும் -சுந்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்ல பரண் எனத் துதி சொல்லி ஏத்தவே ,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணிய குமாரனைக் கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட ,-வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் -சுந்

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங் கிருபை தங்கி வாழவே ,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே ,
உத்தம போதகர்களும் சத்ய திருச் சபைகளும் ,
உயர்ந்து -வாழ, தீயோன்
பயந்து -தாழ, மிக
நயந்து க்ரிஸ்துவுக்கு ஜெயந்தான் , நயந்தான் என்றும்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் கீர்த்தனை 77

பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.

அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்
அனுபல்லவி
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்

மானாபி மானனுக்கு ,வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்

துதி தங்கிய பரமண்டல கீர்த்தனை 74

பல்லவி

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

சரணங்கள்
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் .
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் .- துதி

மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்.
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் .- துதி

திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் .-

அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் ,
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் .-துதி

சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்.
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் .-துதி

விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் .
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் -துதி