Wednesday, June 24, 2009

எத்தனை திரள் என் பாவம் கீர்த்தனை 138

பல்லவி

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே !

எளியன் மேல இரங்கையனே .

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;

நிலைவரம் எனில் இல்லை ;நீ என் தாபரமே ,-எத்

சரணங்கள்

பத்தம் உன் மேல எனக்கில்லை என்பேனோ ?

பணிந்திடல் ஒழிவேனோ ?

சுத்தமுறுங் கரம் கால்கள் ,விலாவில்

தோன்றுது காயங்கள் தூய சிநேகா!- எத்

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே

இடைவிடாதிருக்கையிலே

உந்தன் மிகுங் கிருபை ,ஓ! மிகவும் பெரிதே

உத்தம மனமுடையோய் ,எனை ஆளும் !-எத்

ஆயங் கொள்வோன் போல் ,பாவ ஸ்திரி போல்

அருகிலிருந்த கள்ளன் போல் ,

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;

நீ எனக்காகவே மரித்தனை ,பரனே !-எத்

கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன் ,

கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;

இட்டமாய் மகன் என்ப பாத்திரன் அலன் நான்

எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே ,அப்பனே ! -எத

No comments:

Post a Comment