Monday, August 31, 2009

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே கீர்த்தனை 178

பல்லவி

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறை உண்டு நீ சொல் ,மனமே

சரணங்கள்

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல் குயர்ந்தோர்,உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுக பத்திர மருளும் -என்

பாபமோ ,மரணமோ ,நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ,ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமோ தீர்த்தோர் சற்குரு நாதன் ;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே மகிழாய் .--என்

ஆசி செய்திடுவார் ,அருள் மிக அளிப்பார்
அம்பரந்த் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் ;முன்னமே நடப்பார்
மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும் -என்

கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் ,
கடைசி மட்டும் கைவிடா திருப்பார் ;
பவமன்னிப்பளிப்பார்,பாக்கியங் கொடுப்பார்
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் -என்

போனது போகட்டும், புவி வசை பேசட்டும் ,
பொல்லான் அம்புகள் எய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் ,அருள் மழை பெய்திடும் ,
அன்பு மிகும பேரின்ப மெனக்கருள் -என்

No comments:

Post a Comment