பல்லவி
மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? - மோட்ச
வாழ்வைத் தருவேன் , இது பாராயோ ?
சரணங்கள்
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைபேனே ,- பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே,-
உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே , -அதை
உண்மையாய் அகற்ற யான் மரிததேனே-
பாவம் அனைத்துமே விட்டோடயோ ?-நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? -
உலக வாழ்வினை விட்டகல்வாயே,- மகா
உவப்பாய்க் கதி ஈவேன்: மகிழ்வாயே .-
உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே ,- அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே .-
இந்த பாடல் நாகர் கோவிலில் இருக்கும் யோசேப்பு என்பவரால் இயற்றப்பட்டது இராகம் - கைசிகை தாளம்-ஆதி
ReplyDeleteவிஜய்