பல்லவி
தாசரே இத்தரணியை அன்பாய்
யேசுவுக்கு சொந்தமாக்குவோம் .
அனுபல்லவி
நேசமாய் யேசுவைக் கூறுவோம் ,அவரைக்
காண்பிப்போம் ,மாவிருள் நீக்குவோம் ,
வெளிச்சம் வீசுவோம் .- தாச
சரணங்கள்
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை,
வருந்தி யன்பாய் அழைத்திடுவோம் ,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை ,
நமது துக்கத்தை ,நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாச
பசியுறறோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவிசெய்வோம் ;
உசித நன்மைகள் நிறைந்து ,
தமை மறந்து ,யேசு கனிந்து திரிந்தனரே .- தாச
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் ,
நிஷடூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே,- தாச
மார்க்கம் தப்பி நடப்போரை
சத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ;
ஊக்கமாக ஜெபித்திடுவோம் ,
நாமுயன்றிடுவோம்,நாம் உழைத்திடுவோம் ,நாம் ஜெயித்திடுவோம்;- தாச
No comments:
Post a Comment