Wednesday, April 29, 2009

சீர்திரியேக வஸ்த்தே நமோ ,நமோ ,நின் கீர்த்தனை 4

பல்லவி
சீர்திரியேக வஸ்த்தே நமோ ,நமோ ,நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !

அனுபல்லவி
பார்படைத்தாளும் நாதா,
பரம சற்பிரசாதா,
நாருறுந் தூய வேதா, நமோ, நமோ!- சீர்

சரணங்கள்
தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்
ஆதரிப்போனே - நமோ நமோ
சொந்தக் குமாரன் தந்தாய் ,
சொல்லரும் நலமீந்தாய் ,
எந்தளிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ - சீர்

எங்கள் பவத்தினாசா நமோ நமோ , புது
எருசலேம் நகர் ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற,
எவரும் நின் புகழ்கூற ,
துங்க மந்தையிர் சேர , நமோ நமோ நமோ - சீர்

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ , திட
பலமளித் தெமைக்காவா, நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி ,
கபடற்ற மனசுத்தி ,
திருமொழி பற்றும்பக்தி ,நமோ, நமோ ,நமோ- சீர்



திரிமுதல் கிருபாசனனே, சரணம் கீர்த்தனை 2

திரிமுதல் கிருபாசனனே, சரணம் !

ஜெக தல ரட்சக தேவா ,சரணம் !

தினம் அனுதினம் சரணம் ;-கடாட்சி!

தினம் அனுதினம் சரணம் , -சருவேசா !

நலம் வளர் ஏக திரித்துவா ,சரணம் !

நமஸ்கரி உம்பர்கள் நாதா ,சரணம் !

நம்பினேன் இது தருணம் ; தருணம் ,

நம்பினேன் ,தினம் சரணம் - சருவேசா!

அருவுருவே , அருளரசே ,சரணம் !

அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்

அதிகுணனே,தருணம் -கிரணமொளிர்

அருள் வடிவே ,சரணம் -சருவேசா !

உலகிட மேவிய உனதா -சரணம் !

ஓர் கிருபாசன ஒளியே ,சரணம் !

ஒளி அருள்வாய் ,தருணம் - மனுவோர்க் கு

உத்தமனே ,சரணம் -சருவேசா

Monday, April 27, 2009

தாசரே இத்தரணியை அன்பாய் கீர்த்தனை 224

பல்லவி
தாசரே இத்தரணியை அன்பாய்
யேசுவுக்கு சொந்தமாக்குவோம் .

அனுபல்லவி
நேசமாய் யேசுவைக் கூறுவோம் ,அவரைக்
காண்பிப்போம் ,மாவிருள் நீக்குவோம் ,
வெளிச்சம் வீசுவோம் .- தாச

சரணங்கள்
வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை,
வருந்தி யன்பாய் அழைத்திடுவோம் ,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை ,
நமது துக்கத்தை ,நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே - தாச

பசியுறறோர்க்கு பிணியாளிகட்கு
பட்சமாக உதவிசெய்வோம் ;
உசித நன்மைகள் நிறைந்து ,
தமை மறந்து ,யேசு கனிந்து திரிந்தனரே .- தாச

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம் ;
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள் ,
நிஷடூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே,- தாச


மார்க்கம் தப்பி நடப்போரை
சத்யவழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் ;
ஊக்கமாக ஜெபித்திடுவோம் ,
நாமுயன்றிடுவோம்,நாம் உழைத்திடுவோம் ,நாம் ஜெயித்திடுவோம்;- தாச

வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,கீர்த்தனை 286

பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தார் ,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர் ,பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி!-

சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம் சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய் ;
பொல்லாப் பேயின் மோசம் நின்றென்னைக் காத்தாய்-வினை

சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதி நட்சத்திரம் எழுந்தனவானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதிதானேசென்றன ;
அடியேனும் பள்ளி கொள்வேனே ;-வினை

ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம் ;
ஜெகக் தின்பங்கள் விழைந்து சேர்த்தல் நிர்ப்பந்தம் ;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம் ;
பட்சம் வைத்தாள்வையேல் ,அதுவே ஆனந்தம்; -வினை

இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல்,உன் முத்தி தாராய்; -வினை
.

Saturday, April 25, 2009

பாடித் துதி மனமே கீர்த்தனை 19

பல்லவி
பாடித் துதி மனமே ;பரனைக் கொண்டாடித்
துதி தினமே .

அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி

சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து -பாடி

சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக- பாடி

எத்தனை தீர்க்கர் ,அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் ,இரத்த சாட்சிகள் ,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் -பாடி







Thursday, April 23, 2009

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் கீர்த்தனை 260



பல்லவி

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? -அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்.

அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் .-

சரணங்கள்

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்

எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே. - அதிசய

பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே

வருந்தின சீடர்க்காய் மருகி நின்றாரே-அதிசய

வியாழ னிரவில் வியாகுலத்தோடே

விளம்பின போதகம் மறந்திடலாமோ?- அதிசய

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே

முடிவு பரியந்தம் நிலைப்பிரென்றாரே.- அதிசய

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி

மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே-அதிசய

வேத புத்தகமே வேத புத்தகமே கீர்த்தனை 212

பல்லவி
வேத புத்தகமே ,வேத புத்தகமே ,
வேத புத்தகமே ,விலை பெற்ற செல்வம் நீயே .

சரணங்கள்
பேதைகளின் ஞானமே ,-பெரிய திரவியமே ,
பாதைக்கு நல தீபமே, - பாக்யர் விரும்புந் தேனே !

என்னை எனக்குக் காட்டி -என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே;

துன்ப காலம் ஆறுதல் -உன்னால் வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்- என்றும் நம்பின பேர்க்கே ,-

பன்னிரு மாதங்களும் - பரித்துண்ணலாம் உன் கனி
உன்னைத் தியானிப்பவர் - உயர் கதி சேர்ந்திடுவார் ,-

வாரா வினை வந்தாலும் சோராதே,மனமே கீர்த்தனை 203

பல்லவி
வாரா வினை வந்தாலும் ,சோராதே ,மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்லதாரகமே

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே .- வாரா

பெற்ற பிதாப் போல் உன் குற்றம் எண்ணாதே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே .- வாரா

தன் உயிர் ஈந்திட்ட உன் ஏசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே, நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையே?
வானவனை முற்றும் தான் அடைவாயே ! - வாரா

Wednesday, April 22, 2009

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் கீர்த்தனை 189

பல்லவி
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ,யேசுவே.

அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதிமுன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது ,இப்போது - என்னை
சரணங்கள்
அந்தகாரத்தி னின்றும் ,பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் .-

ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்;
பாத்ரமதாய்க் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணை செய் , தேவா .-

நீதியி னயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றேன் சரீரத்தை .-



இயேசு நேசிக்கிறார் கீர்த்தனை 185

இயேசு நேசிக்கிறார் ,- இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மா தவமோ !

நீசனமெனைத் தான் இயேசு நேசிக்கிறார் ,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் -

பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென்ல்
நித்தம் ஆச்சரியம் .-

ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார் ;
அதை நினைநதவர் அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன் -

ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் இயேசெனைத் தானே சித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன்

வாரும் ஐயா போதகரே கீர்த்தனை 173

வாரும் ஐயா போதகரே ,
வந்தெம்மிடம் தங்கியிரும் ;
சேரும் ஐயா பந்தியினில்
சிரியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாரும் ஐயா !
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் .

நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க ,
தாமதமேன் தயை புரிய
தற்பரனே ,நலம் தருவாய்


உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்

பாதம் ஒன்றே வேண்டும் கீர்த்தனை 172

பாதம் ஒன்றே வேண்டும்;-இந்தப
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்


சரணங்கள்
நாதனே துங்க மெய் -தேவனே ,பொங்குதற்
காதலுடன் துய்ய -தூதர் தொழுஞ் செய்ய -பாதம்

சீறும் புயலினால்- வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற் போல் -நீர் மேல் நடந்த உன்-பாதம்

வீசும் கமழ் கொண்ட -வாசனைத் தைலத்தை
ஆசையுடன் -மரி- பூசிப் பணிந்த பொற் -பாதம்

போக்கிட மற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் தூக்கி நடந்த நற் - பாதம்

நானிலத்தோர் உயர் -வான் நிலத்தேற வல்
ஆணி துளைத்திடத் -தானே கொடுத்த உன் -பாதம்

பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு- நாதனே என்றும் உன்-பாதம்




ஆதாரம் நீர் தான் ஐயா கீர்த்தனை 180

பல்லவி
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.

அனுபல்லவி
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு -

நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு -

கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே -

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -

Tuesday, April 21, 2009

தீய மனதை மாற்ற வாரும் கீர்த்தனை 102

பல்லவி

தீய மனதை மாற்ற வாரும் , தூய ஆவியே , - கன
நேய ஆவியே .

சரணங்கள்

மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
பாவி நான் .- தீய

தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,- மருள்
தீர்க்கும், தஞ்சமே .- தீய

பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடி தான் ஐயா - ஒரு
பாவி நான் ஐயா ,-தீய

ஏக்கதோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே ,-தினம்
இதயம் அஞ்சவே .-

புதிய சிந்தை, புதிய ஆசை புதுபித்தாக்கவே,- அதைப்
புகழ்ந்து காக்கவே,- தீய

கிற்ஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
கிருபை தேடவே.- தீய

தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே,-மிகு
தெளிவு வேண்டவே.- தீய

ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்து போற்றவே, மிக சிறப்பாய்
ஏற்றவே,- தீய

நம்பி வந்தேன் மேசியா கீர்த்தனை 167

நம்பி வந்தேன் மேசியா நான் நம்பி வந்தேனே ,-திவ்ய

சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே .



சரணங்கள்

தம்பிரான் ஒருவனே , தஞ்சமே தருவனே;- வரு

தவீது குமார குரு பரமனுவேலே , நம்பி வந்தேனே ,-



நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் ;- நித

நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே .-



நாதனே கிருபை கூர் ; வேதனே , சிறுமை தீர் ,- அதி

நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே.-



பாவியில் பாவியே , கோவியில் கோவியே கண

பரிவுடன் அருள் புரி அகல விடாதே; நம்பி வந்தேனே,-



ஆதி ஓலோலமே பாதுகா காலமே; உன

தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே

Monday, April 20, 2009

யேசு நசரையீ னதிபதியே கீர்த்தனை 84

யேசு நசரையீ னதிபதியே ,-பவ நரர் பிணை யென வரும் .

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாவனே ம்கத்துவ

சரணங்கள்

இந்த உலகு சுவை தந்து போராடுதே ,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி பாவியகம் நோயினில் வாடுதே .-



நின் சுய பெல னல்லால் என் பெலன் ஏது
நினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் , தவற விடாது ,
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்

கிருபை யுடன்என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்;
பொன்னுலோகமதில் என்னையும் சேரும்

சத்திய் வேதத்தை தினம் தியானி, கீர்த்தனை 210

பல்லவி
சத்திய வேதத்தை தினம் தியானி
சசல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி
உத்தம ஜீவிய வழிகாட்டும் ,உயர் வானுலகில் உனைக்கூட்டும்-சத்

சரணங்கள்

வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலர்க்கினிய் பாலும் அதாம் ;படிமீ தாத்மபசி தணிக்கும்

சத்துரு பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம் ,
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அது நல் உறவாகும்.-சத்தி

புலை மேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கது மருந்தாம்;
நிலையா நரர்வாணன் நிலைக்க நேயகாய கற்பம் அஅதாம் .-சத்தி

கதியின் வழி காணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது ;
புதிய எருசாலேமபதிக்குப போகும் பயணத் துணையும் அது ; சத்தி

ஏற்றுக் கொண்டருளுமே தேவா கீர்த்தனை 208

பல்லவி
ஏற்றுக் கொண்டருளுமே , தேவா,- இப்போ
தேழையேன் ஜெபத்தை யேசுவின் மூலம்.

சரணங்கள்

சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும் ,
சந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும் ,
தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி .-

குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே ,
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுவதும் மேசியா மேல் வைக்கிறேன் ஸ்வாமி .-

மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி ,
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி ,
தேற்றிடும் புது பெலன் ஊற்றிடும் , ஸ்வாமி

விசுவாசம் பெருகி நிலத்திடச் செய்யும் ,
வெளிப்படும் மறை பொருள் பலப்படச் செய்யும்
சிசுவைப் போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

Sunday, April 19, 2009

நீயுனக்குச சொந்தமல்லவே ; கீர்த்தனை 131

பல்லவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே; மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தம்ல்லவே.

அனுபல்லவி
நீயுனக்குச் சொந்தமல்லவே ;
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் .

சரணங்கள்
சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே, திருரத்தம் , ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே;-

இந்த நன்றியை மறந்து போனாயோ ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ ?
சந்த தமுன திதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடை யதல்லவோ ?-

பழைய பாவத்தாசை வருகுதோ ?பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக் கடல் தள்ளுவானேன் ? -

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே உலகை விட்டுப்
பிரியினும் அவர்கே மரிப்பாயே ,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் .-

Thursday, April 16, 2009

மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? கீர்த்தனை 129

பல்லவி
மகனே உன் நெஞ்செனக்குத தாராயோ? - மோட்ச
வாழ்வைத் தருவேன் , இது பாராயோ ?

சரணங்கள்

அகத்தின் அசுத்தமெல்லாம் துடைபேனே ,- பாவ
அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே,-

உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே , -அதை
உண்மையாய் அகற்ற யான் மரிததேனே-

பாவம் அனைத்துமே விட்டோடயோ ?-நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? -

உலக வாழ்வினை விட்டகல்வாயே,- மகா
உவப்பாய்க் கதி ஈவேன்: மகிழ்வாயே .-

உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே ,- அதில்
உன்னதன் வசிக்க இடம் கொடுப்பாயே .-




குணப்படு, பாவி தேவ கோபம் கீர்த்தனை 127

பல்லவி
குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி -இப்போ

அனுபல்லவி
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ -

சரணங்கள்
கர்த்தனை நீ மறந்தாய்,- அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய்,- பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்தி கெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்.-

துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ ?
மிக்கப் புலம்பாயோ? மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவ கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கத் தொடரயோ ?

தாவீ தரசனைப் போல் ,- தன்னை
தாழ்த்தும் ம்னாசேயைப் போல்
பாவி மனுஷியைப் போல்,-மனம்
பதைத்த பேதுரு போல்,
தேவனுகேற் காத தீமை செய்தேனென்று
கூவிப் புலம்பு நாள் ஆவியின் சொற்படி

உன்னை நீ நம்பாதே ,-இவ
வுலகை நம்பாதே !
பொன்னை நீ நம்பாதே ! -எப்
பொருளையும் நம்பாதே !
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அன்னவரைப் பற்று .-




Monday, April 13, 2009

இவரே பெருமான் கீர்த்தனை 75

இவரே பெருமான் மறற
பேர் அளவே பூமான், -இவரே பெருமான்

சரண்ங்கள்
கவலைக் கிடங்கொடுத் தறியார்,- வேறு
பவவினை யாதுமே தெரியார் ,இப்
புவன மீது நம்க்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம்,-பவ
கரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பவபிணி தீர்க்கும் பரிகாரி,-சொல்லும்
வல்லமையில் மிக்க உபகாரி- எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு
மறம் விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே
இறந்தோர்க் குயி ரீயும் கர்த்தன்

அலகை தனை ஜெயித்த வீரன் ,-பல
உலகை ரட்சித்த எழிற் பேரன், விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்.

பொன்னுலகந் தனில்வாழ் யோகன், அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் , நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன்.-

ஏசுவையே துதி செய் கீர்த்தனை 73

ஏசுவையே துதி செய் , நீ மனமே
ஏசுவையே துதி செய்

சரணங்கள்

மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன

எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க



Saturday, April 11, 2009

யூத ராஜ சிங்கம் கீர்த்தனை 324

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிரித்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.-

சரணங்கள்
வேதாளக் கனங்கள் ஓடிடவே.
ஓடிடவே,உருகி வாடிடவே.-- யூத

வானத்தின் சேனைகள் துதித்திடவே ,
துதித்திடவே பரனைத் துதித்திடவே .-யூத

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்ட்ன,
தெறிபட்டன, நொடியில் முறி பட்டன . -யூத

எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே ,பயத்தை என்றும் நீக்குதே.- யூத

மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அக மகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார்-யூத

மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை ,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை .- யூத

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் ,
பாதம் பணிவோம், பதத்தை ச சிரமணிவோம்.

Wednesday, April 8, 2009

கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண் மண் உண்டாக்கின வித்தகனிட மிருந்
தெண்ணிலா வொத்தசை எந்தனுக்கே வரும்

காலைத் தள்ளாட வொட்டார்,உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் ரிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங் காரவர்.-

பக்க நிழல் அவரே -எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனக் சேதப் படுத்தாது
முக்காலம் நின்ரென்னை நற் காவல் புரியவே .-

எல்லாத் தீமை கட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும் ,
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
நல்லாத்தூமாவையும் நாடோறும் காப்பவர்

Tuesday, April 7, 2009

ஆவியை மழை போலே யூற்றும் கீர்த்தனை 98

பல்லவி
ஆவியை மழை போலே யூற்றும் -பல
ஆடுகளை ஏசுமந்தையிற் ம்ந்தையிற் கூட்டும்

அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனை விட்ட கி றிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கி டச் செய்யும் .-

சரணங்கள்
அன்பினால் ஜீவனை விட்டீர் ;- ஆவி
அருள் பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலேபொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும் .-

சிதறுண்டலைகிற ஆட்டைப பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து ,
பதறாதே நான் தான் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கை யருளும் .

காத்திருந்த பல பேரும் - மன்ங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;
தோத்திர கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்

தோத்திர கீதங்கள் பாடி எங்கும்
சுவிஷேச ஜெயததையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேக ரெழும்ப
பரிசுத்த ஆவியின் அருள் மாரி ஊற்றும்


ஆவியை அருளுமே, சுவாமீ கீர்த்தனை 99

பல்லவி
ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே

சரணங்கள்
நற்கனி தேடிவருங் காலங்களல்லவோ?
நானொரு கனியற்ற பாழ் மர மல்லவோ
முற் கனி முக் காண வெம்பயி ரல்லவோ?
முழு நெஞ்சம் விளை வற்ற உவர் நில மல்லவோ ?

பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பரம் சந்தோஷம் , நீடிய சாந்தம்,
தேவ சமாதானம், நற்குணம் , தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை .-

தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊறறும்
திரி யவியாமலேதீண்டியே யேற்றும் ,
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
பரிசுத்த வரந் தந்தென் குறைகளைத் தீரும்

தந்தேன் என்னை இயேசுவே கீர்த்தனை 187

பல்லவி
தந்தேன் என்னை இயேசுவே ,
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்-

சரணங்கள்

ஜீவ் கால்ம் முழுதும்
தேவபணி செய்திடுவேன்.
பூவில் கடும் போர்புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

உலகோர் என்னை நெருக்கிப
பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-

கஷ்ட நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-

உந்தஞ் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-

ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
அன்று சிஷர்க் களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் .

Monday, April 6, 2009

ஆமென் அல்லேலுயா கீர்த்தனை 59

பல்லவி


ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா

ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா





அனுபல்லவி


ஓம் அனாதி தந்தார், இறந்

துயிர்த்தெழுந்தரே, உன்னதரே -





சரண்ங்கள்


வெற்றி கொண்டார்ப்பரித்து-கொடும் வே

தாளத்தை சங்கரித்து, முறித்து ;

பத்ராசனக் கிறிஸ்து -மரித்து

பாடுபட்டுத தரித்து , முடித்தார் .





சாவின் கூர் ஒடிந்து , மடிந்து

தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,

ஜீவனே விடிந்து ,- தேவாலயத்

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-





வேடம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,

மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி

பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி

பத்ராசனத் தேற்றி வாழ்வித் தார்

எங்கே சுமந்து போகிறீர்

பலலவி
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

சரணங்கள்
எங்கே சுமந்து போகிறீர்? இந்தக் கானவில் உம்து
அங்கம் முழுதும் நோக , ஐயா, என் ஏசு நாதா .-

பாரம் அழுத்த் தூக்க பெலம் இல்லம்மால் ,
நாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாத சீமோனும் பின்னாக தாங்கி வர

தாயார் அழுது வர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர -

வல்ல பேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லா பாவங்கள் எல்லாம் நாசமா கவும் -

மாசணுகாத சத்திய் வாசகனே ,உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து

தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வனே ரட்சகரை
தோத்திரம் செய்வேனே

அனுபல்லவி
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்

சரணங்கள்
அன்னை மறி சுதனை புல் மீது
அமிழ்து கழுதவனை,
முனனணை மீதுற்ற சின்ன குமாரனை ,
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

கந்தை போதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க் கானந்த மாட்சிய யளித்தோனை
வான பரன் என்னும் ஞான குண வானை

செம்பொன் னுருவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் -இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில் .

அனுபல்லவி

மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் .

சரணங்கள்
யாக்கோபைப் lபோல் போகும் பாதையில் பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட,
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கி னாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டி ச் சேர்வேன் , வாக்கடங்கா நல்ல நாதா!-

பரத்துக்கேரும் படிகள் போலவே என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே ,
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை யழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் .-

நித்திரை யினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் ;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டி ச் சேர்வேன் .-

ஆனந்தமாம் செட்டை விரித்து பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடுனும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

Saturday, April 4, 2009

எழுந்தார் இறைவன்

பல்லவி
எழுந்தார் இறைவன் ,-ஜெயமே
எழுந்தார் இறைவன்

சரணங்கள்

சாவின் பயங்கரத்தை ஒழிக்க- கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க ,- இப்
பூவின் மீது சபை செழிக்க

செத்தவர் மீண்டுமே பிழைக்க -உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் தேவ
பக்தர் யாவரும் களிக்க .-

விழுந்தவரை கரையேற்றப் பாவத்
தெழுந்து மனுக்குலத்தை மாற்ற -
விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற

கருதிய காரியம் வாய்க்க்த் -தேவ
சுருதி மொழிகளெ ல்லாம் காக்க -நம்
இரு திறத்தாரையும் சேர்க்க -

Friday, April 3, 2009

பவனி செல்கிறார் ராசா

பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!



அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,-



சரணங்கள்
எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின் ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !-




பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.-



குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருந்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.

நாம தாதி பிதாவின் திரு பாலர் இவர்
அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்.-

நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர்.-

ஆதி நரர் செய்த தீதறவே ,
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் .-

ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே .-

மெய்யாகவே மே சியாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே

அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினரே, முடி சூட்டினாரே




எல்லாம் இயேசுவே

எல்லாம் இயேசுவே,- எனக்கெல்லாம்
தொல்லைமிகு மிவ்வுலகில் -துணை யேசுவே


ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்;


தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும் ,-


கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்,
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்

ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்


அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்-


ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்,
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் .-

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுர மாமே ;-
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே .

காசினிதனிலேநேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;- பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத தொலைத்தார்; கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;- பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே .

காலையில் பனி போல் மயமாய் யாவும் உபாயமாய் நீங்கிவிடும் ;
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் ; -நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துணைக் காப்பார்; ஆசைகொள் நீ மனமே ;-

பூலோகத்தாரும் மேலோகத்தரும் புகழ்ந்து போற்று நாமம் ;அதைப்
பூண்டு கொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே

அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் ,- சகோதர
அன்பே பிரதானம் .

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்பவிஸ்வாசம் இவைகளிலெல்லாம்-

பலபல பாஷை படித்தறிந்தாலும்,
கலகல வென்னும் கைமணியாமே.-

என் பொருள் யாவும் ஈந்தளி த்தாலும்
ன்பிலையானால் அதில் பயனில்லை .-

துணிவுடன் உடலை சுடக் கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் அதிற் பயனில்லை.-

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொ றுமையுமுள்ள.-

புகழிறுமாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா .-

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது,- தீமை செய்யாது .-

சக்லமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகை பட வென்னும் மேன்மை பெற்றோங்கும் -


Thursday, April 2, 2009

குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் வாடிய
கொல்கதா மலை தனிலே
குருவேசு சுவாமி கொடுந்துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ!-தீயர்
திருக்கரங்களில் ஆணிகளடித்தார்,
சேனை திரள் சூழ .-

பாதகர் நடுவில் பாவியிநேசன்
பாதகன் போல்தொங்க ,- யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
ப்டுத்திய கொடுமை தனை


சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையா-தேவ சுந்தர
மைந்தனுயிர் விடு காட்சியால்
துடிக்கா நெஞ் சுண்டோ?



ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன்விலாவதிலே,- அவர்
அதகன் தீட்சை குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது, பார் -

எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ - தொன்
கொடுமின் இள மண வாளன்
எடுத்த கோலமிதோ?-











Wednesday, April 1, 2009

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசர்

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே ,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா

முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பாடுவோம்

சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் .

பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீ ணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

குருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

விந்தை கிறிஸ்தேசு ராசா

விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை.

சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும் -

திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே -


உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன் -

சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு ;-
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன் .-

இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன் ;-