Saturday, May 22, 2010

வரவேணும் பரனாவியே கீர்த்தனை 101

பல்லவி
வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,

அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

சரணங்கள்
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் கீர்த்தனை 184

பல்லவி

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ

Monday, May 10, 2010

தந்தானைத் துதிப்போமே கீர்த்தனை 237

பல்லவி

தந்தானைத் துதிப்போமே;- திருச்
சபையாரே, கவி- பாடிப்பாடி .

அனுபல்லவி
ஒய்யாரத்துச் சீயோனே, -நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பி துதி
செய்குவையே ,மகிழ் கொள்ளுவையே , நாமும் -தந்

கண்ணாரக் களித்தாயே ,-நனமிக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து ;
எண்ணுககடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமென்மேற் சோனா மாரிபோற பெய்துமே .- தந

சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
முற்றாய் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தை சிந்தி எடுத்தே உயிர் வரம் -தந

தூரம் திரிந்த சீயோனே ,-உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை- தந

Wednesday, April 28, 2010

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் ,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ,தோத்ரம் ,
ஏர்குணனே தோத்ரம்,அடியார்க் -கு
இறங்கிடுவாய் ,தோத்ரம்,மா தேவா

நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் ,
நித்தமு முமக்கடியார்களின் தோத்ரம் ,
ஆர் மணனே,தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம் ,மா நேசா,

ஜீவன் சுகம் ,பெலன் ,யாவுக்கும் தோத்ரம்,
தினம், தினமஅருள் நன்மைக்கவும் தோத்ரம்,
ஆவலுடன் தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம், மா நேசா .

ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம் ,
சாற்றுகிறோம் தோத்ரம்,உனது
தகுமன்புக்கே தோத்ரம், மாநேசா.

மாறாப் பூரண நேசா,தோத்ரம் ,
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம் ,
தாராய் துணை தோத்ரம் ,இந்தத்
தருணமே கொடு தோத்ரம் , மாநேசா .

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, கீர்த்தனை 65

சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி வாருமேன்,
ஸ்வாமி, வாருமேன் ,-இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் ,- சாலே

சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே -இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ? - சாலோ

எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப்
போகுதே ;--நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே-சாலே

நங்கை எருசலேம்பட்டினம் உமமைநாடித் தேடுதே ;-இந்த
நானிலத்திலுள்ள ஜீவபிராணிகள் தேடிவாடுதே - சாலே

சாட்சியாக சுபவிசேஷம் தாரணி மேவுதே ;உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிகூவுதே -சாலே

கிஞ்சிதமும் , நெஞ்சே , கீர்த்தனை 197

பல்லவி
கிஞ்சிதமும் , நெஞ்சே , அஞ்சிடாதே ;-நல்ல
கேடகத்தைப் பிடி நீ; -விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ .

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெயகின்ற வேலையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ -கிஞ்சித

பாவத்தை வெறுக்க,ஆபத்தைச் சகிக்க ,
பத்தியில் தெளிக்கவும்,-நித்ய
ஜீவனைப் பிடிக்க ,லோகத்தை ஜெயிக்க ,
திறமை அளிக்கவும் ,
சாவே,உன் கூர் எங்கே? பாதாளமே ,உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும் ,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல ஆயுதம் .-கிஞ்சித

பண்டையர் அந்த பரிசையினால் அல்லோ ,
கண்டைந்தார் பேறு?-நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும்;தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது ,மாம்பல
காரியங்களையும் பார்;இது மா ஜெயம் .- கிஞ்சித

ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் ;அதின்
தோற்றமும் முடிவும் எசுபரன் செயல்
துணை அவர் பாதம் ;
ஏற்றர வணைக்கவே,பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே ,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ.- கிஞ்சித

கர்த்தரின் பந்தியில் வா கீர்த்தனை 255

பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா,- சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா .
அனுபல்லவி
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி -கர்த்தரின்

சரணங்கள்
ஜீவா அப்பம் அல்லோ? -கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? -உனக்காய்
பகிரப்பட்டதல்லோ?
தேவ குமாரனாம் ஜீவா அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றுன் பிழைத்திட -கர்த்தரின்

தேவ அன்பைப் பாரு ;கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு;
பாவக் கேட்டைக் கூறு ;-இராப்போசன
பந்திதனில் சேறு;
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே .-கர்த்தரின்

அன்பின் விருந்தாமே;-கர்த்தருடன்
ஐக்யப் பந்தி யாமே;
துன்பம் துயர் போமே ;-இருதயம்
சுத்தத் திடனாமே ;
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போ வா- கர்த்தரின்

Monday, April 26, 2010

ஐயனே உமது திருவடி களுக்கே கீர்த்தனை 277

ஐயனே!உமது திருவடிகளுக்கே
ஆயிரந்தரந் தோத்திரம் !
மெய்யனே !உமது தயைகளை அடியேன்
விவரிக்க எம்மாத்திரம் ?

சென்றதாம் இரவில் தேவரீரென்னைச்
சேர்த்தரவணைத்தீரே ;
அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை
யாகவா தரிப்பீரே

இருதயந் தனை நீ புதியதே யாக்கும்
ஏழையைக் குணமாக்கும்
கருணையாய் என்னை உமதகமாக்கிக்
கன்மமெல்லாம் போக்கும்

நாவிழி செவியை , நாதனே , இந்த
நாளெல்லாம் நீர் காரும் .
தீவினை விலகிநான் திருமுகம் நோக்க
தெய்வமே, அருள்கூரும் .

கைகாலால் நான் பவம் புரி யாமல்
சுத்தனே துணை நில்லும்
துய்யனே ,உம்மால் தான் எனதிதயம்
தூய்வழி செல்லும் .

ஊழியந் தனை நான் உண்மையாச் செய்ய
உதவி நீர் செய்வீரே .
ஏழை நான் உமக்கே இசையநல் ஆவி
இன்பமாய்ப் பெய்வீரே.

அத்தனே! உமது மகிமையை நோக்க ,
அயலான் நலம் பார்க்கச்
சித்தமாய் அருளும் ,மெய்விசுவாசம் ,
தேவனே உமக்கேற்க.

இன்றும் என்மீட்ப்பைப் பயம் நடுக்கத்தோ
டேயடியேன் நடத்தப்
பொன்றிடா பலமே தாரும்.என் நாளைப்
பூவுலகில் கடத்த .

இந்த நாளிலுமே திருச்சபை வளர
ஏகா தயைகூரும்.
தந்தையே ,நானதற் குதவியாயிருக்கத்
தற்பரா வரந்தாரும் .

எந்நாளுமே துதிப்பாய் கீர்த்தனை 303

பல்லவி
எந்நாளு மேதுதிப்பாய் -என்னாத்துமாவே , நீ
எந்நாளு மேதுதிப்பாய் !

அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது-எந்நாளு

சரணங்கள்

பாவங்கள் எத்தனையோ-நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி -எந்நாளு

எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே ,
எத்தனையோ கிருபை?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் .-எந்நாளு

நன்மையாலுன் வாயை நிறைத்தாரே ,பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப் போல் பலங் கொண்டு
ஓங்கு இளமை போல் ஆகவே செய்தததால் -எந்நாளு

பூமிக்கும் வானத்துக்கும் -உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே ,சத்தியமே யிது-ennalu

மன்னிப்பு மாட்சிமையாம் -மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
என்னில் உன் பாவம் அகன்றதத்தூரமே-எந்நாளுமே

தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்;
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே .-எந்நாளு

ஆனந்தமே ஜெயா! ஜெயா! கீர்த்தனை 302

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

அனுபல்லவி
ஞானரட்சகர் நாதர் நமை-இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார்-புகழ்

சரணங்கள்

சங்க கணம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமி-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் -புகழ்

முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் -வெகு
தயவுடம் யேசு தற்காத்ததினால் -புகழ்

பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் .
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்

ஆர் இவர் ஆராரோ கீர்த்தனை 32

பல்லவி

ஆர் இவர் ஆராரோ -இந்த -அவனியோர் மாதிடமே

ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பால கனார்?

சரணங்கள்

பாருருவாகுமுன்னே -இருந்த -பரப் பொருள் தானிவரோ ?

சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுங் சிருட்டித்த மாவலரோ? -ஆர்

மேசியா இவர் தானோ? -நம்மை மேயத்திடும் நரர்கோனோ?

ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ ?-ஆர்

தித்திக்குந் தீங்கனியோ? -நமது -தேவனின் கண்மணியோ?

மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ ?- ஆர்

பட்டத்துத் துரைமகனோ ?-நம்மைப்-பண்புடன் ஆள்பவனோ?

கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?-ஆர்

ஜீவனின் அப்பமோதான்? -தாகம் -தீர்திடும்பானமோதான்?

ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர் தானோ? -ஆர்

Saturday, April 24, 2010

அதி மங்கல காரணனே கீர்த்தனை 22

பல்லவி
அதி மங்கல காரணனே , துதி -தங்கிய பூரணனே -நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்
மங்கின எங்களுக்கும், திதி சிங்கினர் தங்களுக்கும் -உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிட வையாய், துங்கவனே-அதி

முடி மன்னர்கள் மேடையும் ,மிகு -உன்னத வீடதையும் - நீங்கி
மாட்டிடையே பிறந்த தாட்டிடையர் தொழ வந்தனையோ தரையில்-அதி

தீய பேய்த் திரள் ஓடுதற்க்கும்,உம்பர் வாயத்திரள் பாடுதற்கும் -உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்புற்று வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ?


ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புத பாலனாகப் பிறந்தார் ;
ஆதந் தன பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய் ,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் ,
மின்னுச்சீர் வாசகர் , மேனி நிறம் எழும்
உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ,ரஞ்சிதனார் ,
தாம் தாம், தன்னரர வன்னரர்
தீம், தீம் தீமையகற்றிட
சங்கிர்த, சங்கிர்த ,சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட -ஆதி

சரணங்கள்
ஆதாம் சாதி ஏவினர் ;ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் .-ஆதி

பூலோகப் பாவ விமோசனர் ,பூரண கிருபையின் வாசனர் ,
மேலாக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் ,-ஆதி

அல்லேலுயா ! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே,
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் .-ஆதி

ஆ! அம்பர உம்பர மும் கீர்த்தனை 33

பல்லவி

ஆ! அம்பர உம்பர மும் புகழ்ந்திரு

அதிபன் பிறந்தார் .

அனுபல்லவி

ஆதிபன் பிறந்தார் ,-அமலாதிபன் பிறந்தார்.- ஆ!

சரணங்கள்

அன்பான பரனே !-அருள் மேவுங் காரணனே -நவ

அச்சய சச்சித - ரட்சகனாகிய

உச்சித வரனே !- ஆ!

ஆதம் பவமற,-நீதம் நிறைவேற -அன்று

அல்லிராவினில் -தொல்லையிடையினில்

புல்லணையிற் பிறந்தார் .- ஆ!

ஞானியர் தேட, வானவர் பாட,-மிக

நன்னய ,உன்னத-பன்னரும் ஏசையா

இந்நிலம் பிறந்தார் .-ஆ!

கோனவர் நாட,- நானவர் கொண்டாட ,-என்று

கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே , யூத

கோத்திரன் பிறந்தார் .-ஆ!

விண்ணுடு தோண,- மன்னவர் பேண ,- ஏரோது

மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட

விந்தையாய்ப் பிறந்தார் .- ஆ!

அனுக்ரக வார்தையோடே கீர்த்தனை 317

அனுக்ரக வார்த்தையோடே -இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.

நின்திரு நாமமதில் -கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.

தோத்திரம்,புகழ் ,மகிமை,-கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே;அதிசோபிதபரனே!
பாதசரண் ஆமென்!

Friday, April 23, 2010

அந்த நாள் பாக்கிய நாள் கீர்த்தனை 120

பல்லவி
அந்த நாள் பாக்கிய நாள் -நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள் .

அனுபல்லவி
அந்த நாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை
அன்போடழைத் தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் -அந்த

சரணங்கள்
அன்றே என்க்குப் போதித்தார் ,-அவர் வழியில்
அனுதினம் செல்லக் கற்பித்தார் ;
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர்,எங்கும் எடுத்துரைப்பேனே .-அந்த

என்றனை அன்றே எழுத்தார் -தமதன்பினால்
இசைவாயத் தம் முடன் இணைத்தார் ;
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் என்க்கு,
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் .-அந்த

ஆறுதல்களால் நிறைந்தேன் ,- அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்தேன் ;
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாயத் தங்கப் பெற்றேன். -அந்த

அந்நாளில் வாக்குப் பண்ணினேன் ,-உறுதியாக
எந்நாளும் நான் புதுப்பிப்பேன் ;
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பெலம தாராய், என்னையாட்கொண்ட தேவா

இயேசு நான் நிற்குங் கன்மலையே கீர்த்தனை 183

பல்லவி
இயேசு நான் நிற்குங் கன்மலையே !-மற்ற
எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே !

சரணங்கள்

இயேசுவின் நாமத்தின் மேலே-என்றான்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;
நேசனையுங் கூட நம்பேன்,-நான்
ஏசுவின் நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்.- இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க,-நான்
உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;
உரமாகக் கடும் புயல் வீச ,- சற்றும்
உலையாத எனது நங்கூரம் அவரே .- இயேசு

பேரு வெள்ளம் ,பிரவாகம் வரினும் -அவர்
பிரதிக்ஞை,ஆணை, இரத்தம் என் காவல்;
இருதயத்தின் நிலை அசைய-அப்போ
தேசுவே என் முழு நம்பிக்கையாமே .-இயேசு

சோதியாய் அவர் வரும்போது - நான்
சுத்தனைத் தரிசித்தே அவரைப் போலாவேன்;
நீதியாம் ஆடை தரிப்பேன்,-சதா
நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்;-இயேசு

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

இயேசுவை நாம் எங்கே காணலாம்?
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்?

அனுபல்லவி
பனிபடர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலை நடுவே பார்க்க முடியுமா?

ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தை காணேனே
பாடுபடும் ஏழைநான் அழுது வாடினேனே -இயேசு

வானமதில் பவனிவரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியில் வீசும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிடமாட்டாயோ-இயேசு

கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
வின்னாரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண்விழித்தேன் என்முன்னே கர்த்தர் இயேசு நின்றார்- இயேசு

எழுதியவர் ஜி புஷ்பநாதன்

Tuesday, April 20, 2010

வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே கீர்த்தனை 11

பல்லவி
வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே !-இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.

சரணங்கள்

சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுனன்றிகடையாலமே,-நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காதததுவே-எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!

சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே , சத்ய
சருவேசுரனே ,கிருபாகரனே ,உன் சருவத்துகுந் துதியே .

உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .

மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை -உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .

சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா கீர்த்தனை 49

பல்லவி
சரணம், சரணம், ஆனந்தா சச்சிதானந்தா ,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பன்னினான் .- சர\

கற்றூணில் சேர்த்திருகக்கட்டி, வலுவாய்க்
காவலன் தன சேர்வை எல்லாம் கூடி அளித்தார்- சர

முள்ளின் முடி செய்தழுத்தி வள்ளல் எனவே
மூர்க்க முடனே தடிகொன் டார்க்க அடித்தார் - சர

கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் -சர

துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் ,
துன்னிய கைக்கோளை வாங்கி சென்னியில் போட்டார் .சர

முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே ,
முன்ன்வனைப் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் -சர

ஆ! இன்ப கால மல்லோ கீர்த்தனை 209

பல்லவி

ஆ! இன்ப கால மல்லோ?-ஜெபவேளை
ஆனந்த காலமல்லோ ?

அனுபல்லவி
பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப்
பொன்னுல காதிபன் முன்னை கொண்டேகிடும் - ஆ!

சரணங்கள்

துன்பம் துயர் நீக்கி,-பொல்லாங்கன் - சோதனைகள் போக்கி ,
அம்பர வாசிகளோ - டிதயத்தை -இன்ப உறவாக்கி
கெம்பீரமாகாவே தம்பிரான் ஆசனம்
கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும் .- ஆ!

ஜீவ ஆறுதல் பெற்று,-பிஸ்காவின்-சிகரமதினில் உற்று
தேவ நகர் கானுற்றுச் சடத்தை -ஜெகத்தில் எரிந்துவிட்டு,
ஆவிகளிப்புடன் ஆகாயஞ் செல்லவே ,
அன்பொடுபார்த்து நல வந்தனஞ் சொல்லுவேன்- ஆ!

போசனந்தா னுமுண்டோ கீர்த்தனை 256

பல்லவி
போசனந்தா னுமுண்டோ- திருராப்
போசனம் போலுலகில்?

அனுபல்லவி
ராசரும் வையக நீசரும் அம்பரன்
நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் - போச

சரணங்கள்
கர்த்தன் மரணத்தின் சாசன போசனம்;
கன்மி கட் கானமெய் நேசத்தின் போசனம் ;
பத்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம் ;
பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம் - போச

பூர்வ ஏற்பாட்டோர்கள் உண்ணாத போசனம் ;
ஓர் காலமும் குறைவாகத போசனம்;
ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம் ;-போச

பஸ்காப் பலியின்பொருள் என்னும்போசனம் ;
பாவி புசிக்கும் சமாதான போசனம் ;
நிஷ்கார நிந்தைப் பவம் போக்கும் போசனம்;
நின்மலன் தந்திடும் அற்புத போசனம் .-போச

Monday, April 19, 2010

வேறு ஜென்மம் வேண்டும் கீர்த்தனை 122

பல்லவி
வேறு ஜன்மம் வேண்டும் ,- மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

சரணங்கள்
கூறு பரிசுத்தர் மாறில்லா தேவனின்
தேறுதலான வின்பெறு பெற இங்கே.- வேறு

பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய -வேறு

மானிடரின் அபிமானத்தினாலல்ல ,
வானவரின் அருள் தானமாக வரும் ;- வேறு

ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய ;- வேறு

மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே ,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள். - வேறு

மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும் ,
விண்ணினில் தூயராய் தண்ணனி கொள்ளவும் -வேறு

சித்தம் கலங்காதே ,பிள்ளையே ,கீர்த்தனை 158

பல்லவி
சித்தம் கலங்காதே ,பிள்ளையே ,
செய்வதெ னென்று .

சரணங்கள்

மெய்யனுக்குன் குறை சொல்லு
வேண்டியதடைந்து கொள்ளு,
துய்யனிடம் நீ செல்லு,
துற ஆசாபாசங்கள் வெல்லு .- சித்தம்

எங்கே நானேகுவே னென்று
ஏங்கித் தவிக்காதே நின்று,
துங்க னெல்ல்லாமுமே வென்று
சுகமளிப் பாரோ வென்று .- சித்தம்

பரலோக வாழ்வை நாடு
பரண் தயவை நீ தேடு,
தரை யினபம் விட்டுப் போடு ,
தகக் கவலை விட்டோடு .-சித்தம்

Friday, April 16, 2010

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னை தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார்

எத்துன்ப நேரத்திலும்
ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் - இயேசு

சோர்வடையும் நேரத்தில்
ஆறுதல் உனக்களிப்பார்
யாராயிருந்தாலும் பேதங்களின்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே - இயேசு

சகல் வியாதியையும்
குணமாக்க வல்லவராம்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்பு மானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் - இயேசு

நெஞ்சே நீ கலங்காதே கீர்த்தனை 200

பல்லவி
நெஞ்சே நீ கலங்காதே ;-சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே ;-நான் என் செய்வேனென்று ..

அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வார வினை வந்தாலும் .- நெஞ்

சரணங்கள்

பட்டயம் பஞ்சம் வந்தாலும், அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும் ,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் - நெஞ்

சின்னத்தனம் எண்ணினாலும் - நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும் , வந்தணாப்பினாலும் -நெஞ்

கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும் ,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் -நெஞ்

உச்சித மோட்ச பட்டணம் போக கீர்த்தனை 235

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே ;- அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு , ஓயா இன்பமுண்டு ,

சரணங்கள்

சித்தச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் -எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். - உச்சித

அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்;- அங்கே
இன்பங்க்ல்களுண்டு; இயேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே - உச்சித

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்; -அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறிவோம்- உச்சித

Thursday, April 15, 2010

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உத்தியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா என் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசிர்வத்திடும்

இம் மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமமே
உம்மிலே தங்கிதரிக்க
ஊக்கமருளுமே

ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாலும் நீர் ஏக ராஜனாய்
ஏற்ற வான்ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே

பூதல ஆசிர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மை பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இயேசுமா ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1 அற்புதமான அன்பே -என்னில்
பொற்பரன் பாராட்டும் தூயஅன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே. - தோத்திரம்

2.ஜோதியாய் வந்து அன்பே-பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்ய மதுர அன்பே - தோத்திரம் .

3.மாய உலக அன்பை- நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - தோத்திரம்

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னைப்போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே - தோத்திரம்

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - தோத்திரம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்
இயேசு ராஜா நம் சொந்தமாயினார்
இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார் .

பல்லவி
ஆ ...ஆ ...ஆனந்தமே
பரமானந்தமே -இது மா பெரும் பாக்கியமே

2 .சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கொண்டுகொண்டார்
தமது ஜீவனை என்னாகும் அளித்து
ஜீவன் பெற்றுகொள் என்றுரைத்தார் - ஆ.. ஆ.. ஆனந்தமே

3 . எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காட்டுக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் - ஆ.. ஆ..ஆனந்தமே

4 . அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பைக் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
அவர் சமுகமதில் அங்கே அவருடனே
ஆடிப் பாடியே மகிழ்ந்திடுவேன் . ஆ.. ஆ. ஆனந்தமே

மங்களம் செழிக்க கிருபை அருளும்

மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே
மங்கள நித்திய மங்கள நீ , மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ , எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக்கத்தனாம் ஆபிரகாம் தேவன் நீ- மங்களம்


மங்கள மணமகன்
மங்கள மணமகள்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே உனை
துத்தியம் செய்திடும் சத்திய வேடர்க்கும்-மங்களம்

Wednesday, April 14, 2010

நல்லாவி ஊற்றும்

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான்தர நித்தம் துதிபாட
நல்லவி ஊற்றும் தேவா

பெந்தே கொஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேலையில் இறங்கிடுவீரே
விந்தை செய் வின் ஆவியாய்

மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டென்னையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே

ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேடப் பணியாற்றவும்

பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திரு
நாமத்தி னாதரவில்

இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம்

இத்தனை மகத்வமுள்ள பதவி
ஈனர்கள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்
மன்னவனே உமக்கு .

நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே .

எந்தன் நாவில் புது பாட்டு

எந்தன் நாவில் புது பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்- அல்லேலுயா

பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார் - ஆனந்தம்

வாதை நோயும் வந்த போது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீடிட்டார் - ஆனந்தம்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவ ரத்தம் கொண்டு மாற்றினார் - ஆனந்தம்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - ஆனந்தம்

இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் - ஆனந்தம்

என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1 . வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை

2 .பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவருமென்னை - என்னை

3 .தாய் தன சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை

4 .உன்னை தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே - என்னை

5. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வைத்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னை

என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே - என்னை

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம் .

1 . ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளி தன்னைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும். - கர்த்தரை

2 . உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தை காத்திடுவார் .- கர்த்தரை

3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - கர்த்தரை

4 . அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார்.- கர்த்தரை

5 .நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே - கர்த்தரை

6 .இம்மைக் கேற்ற இன்பங்களை
நம்மைவிட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை ராஜ்ஜியத்தில்