பல்லவி
நெஞ்சே நீ கலங்காதே ;-சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே ;-நான் என் செய்வேனென்று ..
அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வார வினை வந்தாலும் .- நெஞ்
சரணங்கள்
பட்டயம் பஞ்சம் வந்தாலும், அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும் ,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் - நெஞ்
சின்னத்தனம் எண்ணினாலும் - நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும் , வந்தணாப்பினாலும் -நெஞ்
கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும் ,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் -நெஞ்
துன்ப நேரத்தில் ஆறுதல் தரும் சிறப்பான பாடல் இது. இதை D.G.S.தினகரன் மிக உணர்வு பொங்க பாடியிருப்பார். சாஸ்திரியார் எழுதிய அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.
ReplyDelete