ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் உம அடியார்திரு
நாமத்தி னாதரவில்
இன்றைத் தினமதிலும் ஒருமித்து
கூட உம நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
நின் உதிரமதினால் திறந்த
நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சன்னதி
சேரவுமே சந்ததம்
இத்தனை மகத்வமுள்ள பதவி
ஈனர்கள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கபெரும்
மன்னவனே உமக்கு .
நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேற்றமில்லை பரனே .
No comments:
Post a Comment