Wednesday, June 24, 2009

ஏசுவே கிரு பாசனப்பதியே கீர்த்தனை 153

பல்லவி

யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட

இழிஞன் எனை மீட்டருள் ,

ஏசுவே,கிரு பாசனப்பதியே

சரணங்கள்

காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு

கண்டிலேன் ,சருவ வல்ல மண்டலாதிபா !

நேசமாய் ஏழைக்கிரங்கி,மோசம் அணுகாது காத்து

நித்தனே, எனைத் திருத்தி ,வைத்தருள் புத்தி வருத்தி ,-யேசு

பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் , பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் ;

தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட

தேவனே , எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி , -யேசு

சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி

தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே ,

குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா ? எனைச் சதிக்கும்

குற்றங்கள் அறவே தீர்த்து ,முற்று முடியக் கண் பார்த்து ,- யேசு

பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை ,

புண்ணியனே உம சரணம் நண்ணி அண்டினேன் ;

எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி ?

இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச சொரிந்து -யேசு

எத்தனை திரள் என் பாவம் கீர்த்தனை 138

பல்லவி

எத்தனை திரள் என் பாவம் என் தேவனே !

எளியன் மேல இரங்கையனே .

அனுபல்லவி

நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;

நிலைவரம் எனில் இல்லை ;நீ என் தாபரமே ,-எத்

சரணங்கள்

பத்தம் உன் மேல எனக்கில்லை என்பேனோ ?

பணிந்திடல் ஒழிவேனோ ?

சுத்தமுறுங் கரம் கால்கள் ,விலாவில்

தோன்றுது காயங்கள் தூய சிநேகா!- எத்

என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே

இடைவிடாதிருக்கையிலே

உந்தன் மிகுங் கிருபை ,ஓ! மிகவும் பெரிதே

உத்தம மனமுடையோய் ,எனை ஆளும் !-எத்

ஆயங் கொள்வோன் போல் ,பாவ ஸ்திரி போல்

அருகிலிருந்த கள்ளன் போல் ,

நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;

நீ எனக்காகவே மரித்தனை ,பரனே !-எத்

கெட்ட மகன் போல் துட்டனாய் அலைந்தேன் ,

கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;

இட்டமாய் மகன் என்ப பாத்திரன் அலன் நான்

எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே ,அப்பனே ! -எத

Tuesday, June 23, 2009

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே கீர்த்தனை 333

பல்லவி

எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே !

அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்,- எங்கும்

சரணங்கள்
ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர் ;
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கிதயம் தந்திடுவீர் .- எங்கும்

கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்கு
கடன் பட்டவர் கண் திறக்கவே;
பல்வலி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் .-எங்கும்

தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி ?
பாழுந் துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ ?-எங்கும்

சுத்த சுவிஷேசம் துரிதமாய்ச் செல்ல
தூதர் நீங்களே தூயன் வீரரே ;
கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர் -எங்கும்

இம்மட்டும் ஜீவன் தந்த கீர்த்தனை 306

பல்லவி


இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த


எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.



அனுபல்லவி


நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து


நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் .-இம்



சரணங்கள்

காலம் சொல் போல் கழியும் ,தண்ணீரைப் போல் வடியும் ,

கனாவைப் போலேயும் ஒழியும்;

வாலிபமும் மறையும் ,சீலம் எல்லாம் குறையும் ,

மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது ;

கோலப் புதுமைக்கும் , நீர் குமிழிக்கும் ,புகைகுமே

கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்

கண்டு கருணைகள் விண்டு தயவுடன் .-இம்

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;

பரம பாதையைத் தொடர்ந்தோம் ;

வலிய தீமையை வென்றோம் ;நலியும் ஆசையைக் கொன்றோம் ;

வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;

கவி என்ற தெல்லாம் விண்டோம் ;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் ;

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்

சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் .-இம்

சன தேசம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு

தந்து, நொறுங்கினதைக் கட்டிக்

கன சபையை ஆதரித் தன்பாய் ஆசிர்வதித்துக

கண்ணோக்கி எல்லார் மேல அன்றன்று

தினமும் அருள் உதிக்கச் செய்து ,தமது தேவ

மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் -இம்

Sunday, June 21, 2009

காலையில் தேவனைத் தேடு கீர்த்தனை 276

பல்லவி

காலையில் தேவனைத் தேடு ;-ஜீவ

காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு .

அனுபல்லவி

சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு ,

சீரான நித்திய ஜீவனை நாடு .- காலையில்

சரணங்கள்

மன்னுயிர்க்காய் மரித்தாரே ,-மனு

மைந்தனென நாமம் வைத்திருந்தாரே ;

உன் சிருட்டிகரை நீ உதயத்தில்லெண்ணு

உள்ளங் கனிந்து தனி ஜெபம் பண்ணு .- காலையில்

பாவச் சோதனைகளை வெல்லு ;-கெட்ட

பாருடல் பேயுடன் போருக்கு நில்லு ;

ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்

சிந்தனை செய் ;மனுவேலனைப் பணிய .-காலையில்

சிறுவர்கள் என்னிடஞ் சேரத் -தடை

செய்யா திருங்களென்றார் மனதார ;

பரலோக செல்வ மவர்க்கு பலிக்கும் ;

பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும் -காலையில்

வேலையுனக்குக் கைகூட -சத்ய

வேதன் கிருபை வரத்தை மன்றாட ,

காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே ,

கண் விழித்து ஜெபஞ் செயும்மென்றரே

Thursday, June 18, 2009

பக்தருடன் பாடுவேன் கீர்த்தனை 275

பல்லவி



பகதருடன் பாடுவேன் -பரம சபை
முக்தர் குழாம் கூடுவேன்



அனுபல்லவி



அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த



சரணங்கள்



அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும் ,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த

இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு
அகமும் ஆண்டவன் அடியே ,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த

தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில் ,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி ,
தூயா ,திருப்பாதத் தரிசனம் தந்தருள்- பக்த

என் உள்ளங் கவரும் கீர்த்தனை 170

பல்லவி
என் உள்ளங் கவரும் ,-நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட .

அனுபல்லவி
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் ,தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை -என்

சரணங்கள்

உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன் ,
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன் ,
எந்தையே ,நானும்மைச் சேர்ந்தவனாயினும் ,
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட -என்

சுத்த கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட,
அத்தனே ,உம்மில் நல நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட .- என்

உந்தனடியில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம் ;
என் தேவனே , அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷனை செய்வதே ஆனந்தம் - என்

அம்பரா , மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு ;
என் பரனே, உந்தன் அன்பின் ஆழம் உண்டு ;
இம்மையில் கூடிய மட்டும் அறிந்திட -என்