Showing posts with label வே. மாசிலாமணி. Show all posts
Showing posts with label வே. மாசிலாமணி. Show all posts

Wednesday, June 8, 2011

சமயமிது நல்லசமயம் ,உமதாவி கீர்த்தனை 97

பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவி
தரவேனுமே

அனுபல்லவி
அமையுஞ் சத்துவங்குன்றி,
அருள் ஞானத் துயிரின்றி ,
அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்
அடியன்மீ தணல்மூட்டி யுயிர் தர ,-

சரணங்கள்
யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும்விசு
வாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,
வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டி
மிஞ்சுஞ்சீவ நற்கனிகளீங்குமைக்
கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சம

ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோ
செய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?
தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?
தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிட
உந்தையையினுற் சாகநல்லாவியை, - சம


ஓதும் பிரசங்கமும் ஓசைக்கைத்தாளம்போல
ஒலிக்குதல்லாமல் பலன் பலிக்குதில்லை , தாக்குள்
ஏதுமற்றிடும் பள்ளத்தெலும்பு உயிர்த்தெழும்ப
எசேக்கியேலுரை வாக்கிலு யிரருள்
போக்கியே செய்த ஆவியே இங்ங்னம், - சம

பெந்தெகோஸ்தினில் கூடிவந்த சீடரையன்று
உந்தனாவியினைப் பொழிந்தபிஷேகஞ் செய்த
விந்தைபோலெமதிடம் வந்தெம் வேலைகள் முற்றும்
வேதனே உமதருளி னுயிர்பெறப்
பூதலர் உமைப் போற்ற நின் சேயராய்ப் , சம

Monday, May 10, 2010

தந்தானைத் துதிப்போமே கீர்த்தனை 237

பல்லவி

தந்தானைத் துதிப்போமே;- திருச்
சபையாரே, கவி- பாடிப்பாடி .

அனுபல்லவி
ஒய்யாரத்துச் சீயோனே, -நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பி துதி
செய்குவையே ,மகிழ் கொள்ளுவையே , நாமும் -தந்

கண்ணாரக் களித்தாயே ,-நனமிக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து ;
எண்ணுககடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமென்மேற் சோனா மாரிபோற பெய்துமே .- தந

சுத்தாங்கத்து நற்சபையே,-உனை
முற்றாய் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தை சிந்தி எடுத்தே உயிர் வரம் -தந

தூரம் திரிந்த சீயோனே ,-உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை- தந

Wednesday, April 28, 2010

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6

சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் ,
சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ,தோத்ரம் ,
ஏர்குணனே தோத்ரம்,அடியார்க் -கு
இறங்கிடுவாய் ,தோத்ரம்,மா தேவா

நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் ,
நித்தமு முமக்கடியார்களின் தோத்ரம் ,
ஆர் மணனே,தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம் ,மா நேசா,

ஜீவன் சுகம் ,பெலன் ,யாவுக்கும் தோத்ரம்,
தினம், தினமஅருள் நன்மைக்கவும் தோத்ரம்,
ஆவலுடன் தோத்ரம் ,உனது
அன்பினுக்கே தோத்ரம், மா நேசா .

ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம் ,
சாற்றுகிறோம் தோத்ரம்,உனது
தகுமன்புக்கே தோத்ரம், மாநேசா.

மாறாப் பூரண நேசா,தோத்ரம் ,
மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம் ,
தாராய் துணை தோத்ரம் ,இந்தத்
தருணமே கொடு தோத்ரம் , மாநேசா .

Monday, April 26, 2010

ஆனந்தமே ஜெயா! ஜெயா! கீர்த்தனை 302

ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

அனுபல்லவி
ஞானரட்சகர் நாதர் நமை-இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார்-புகழ்

சரணங்கள்

சங்க கணம், வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம் ,
எங்கள் ரட்சகரேசு நமி-வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் -புகழ்

முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் -வெகு
தயவுடம் யேசு தற்காத்ததினால் -புகழ்

பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளைநோய் விஷதோஷத்திற்கும் .
தஞ்சரட்சகர் தவிர்த்து நமை -இத்
தரைதனில் குறைதணித் தாற்றியதால் - புகழ்

ஆர் இவர் ஆராரோ கீர்த்தனை 32

பல்லவி

ஆர் இவர் ஆராரோ -இந்த -அவனியோர் மாதிடமே

ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பால கனார்?

சரணங்கள்

பாருருவாகுமுன்னே -இருந்த -பரப் பொருள் தானிவரோ ?

சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுங் சிருட்டித்த மாவலரோ? -ஆர்

மேசியா இவர் தானோ? -நம்மை மேயத்திடும் நரர்கோனோ?

ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ ?-ஆர்

தித்திக்குந் தீங்கனியோ? -நமது -தேவனின் கண்மணியோ?

மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்ணொளியோ ?- ஆர்

பட்டத்துத் துரைமகனோ ?-நம்மைப்-பண்புடன் ஆள்பவனோ?

கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ?-ஆர்

ஜீவனின் அப்பமோதான்? -தாகம் -தீர்திடும்பானமோதான்?

ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர் தானோ? -ஆர்

Tuesday, April 20, 2010

வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே கீர்த்தனை 11

பல்லவி
வந்தனம் , வந்தனமே, தேவ துந்துமி கொண்டிதமே !-இது
வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.

சரணங்கள்

சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுனன்றிகடையாலமே,-நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.

சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காதததுவே-எங்கள்
சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!

சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே , சத்ய
சருவேசுரனே ,கிருபாகரனே ,உன் சருவத்துகுந் துதியே .

உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் -
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே .

மாறாப் பூரணனே , எல்லா வருடங்களிலும் எத்தனை -உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே .