Saturday, April 24, 2010
ஆதந் தன பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட
அனுபல்லவி
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய் ,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர் ,
மின்னுச்சீர் வாசகர் , மேனி நிறம் எழும்
உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ,ரஞ்சிதனார் ,
தாம் தாம், தன்னரர வன்னரர்
தீம், தீம் தீமையகற்றிட
சங்கிர்த, சங்கிர்த ,சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட -ஆதி
சரணங்கள்
ஆதாம் சாதி ஏவினர் ;ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார் .-ஆதி
பூலோகப் பாவ விமோசனர் ,பூரண கிருபையின் வாசனர் ,
மேலாக ராஜாதி ராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் ,-ஆதி
அல்லேலுயா ! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே,
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் .-ஆதி
Friday, April 16, 2010
நெஞ்சே நீ கலங்காதே கீர்த்தனை 200
நெஞ்சே நீ கலங்காதே ;-சீயோன் மலையின்
இரட்சகனை மறவாதே ;-நான் என் செய்வேனென்று ..
அனுபல்லவி
வஞ்சர் பகை செய்தாலும், வார வினை வந்தாலும் .- நெஞ்
சரணங்கள்
பட்டயம் பஞ்சம் வந்தாலும், அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும் ,
மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் - நெஞ்
சின்னத்தனம் எண்ணினாலும் - நீ நன்மை செய்யத்
தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும் , வந்தணாப்பினாலும் -நெஞ்
கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும் ,
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமொதினாலும் -நெஞ்
Friday, November 6, 2009
தேவா இரக்கம் இல்லையோ ? கீர்த்தனை 148
பல்லவி
தேவா இரக்கம் இல்லையோ ?-இயேசு
தேவா இரக்கம் இல்லையோ ?
அனுபல்லவி
ஜீவா,பரப்ரம ஏகோவா திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ,ஒரே .- தேவா
சரணங்கள்
எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே ,-கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதா!-தேவா
எங்கும் நிறைந்த ஜோதியே ,-ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே ,-எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ் க்ரீடாதிபதி !- தேவா
வேதாந்த வேத முடிவே ,-ஜெக
ஆதாரம் ஆன வடிவே ,-ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே ; யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை
Sunday, July 26, 2009
ராச ராச பிதா மைந்த கீர்த்தனை 91
பல்லவி
ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே !
அனுபல்லவி
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக -
சரணங்கள்
மாசிலாமணியே ! மந்தர ஆசிலா அணியே ! சுந்த்ர
நேசமே பணியே , தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே ! இறையான சாந்தனே ! மறை - ராச
ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே ,முந்த
வேதா பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே ;
பத ஆமனாமானா ! சுதனாமனாமனா! சித- ராச
மேன்மையா சனனே ,நன்மை மேவுபோசனனே ,தொன்மை
பான்மை வாசனனே ,புன்மை பாவ மோசனனே ,
கிருபா கரா நரா! சருவேசுரா ! பரா ,திரு - ராச
வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே ,மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான் ;சுரராடு கோவினான், பர -ராச
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் கீர்த்தனை 90
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் ;-எங்கள்
குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன் .
சரணங்கள்
அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் ;-எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் ;
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் ;-பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் ;
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;-நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் ;
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் .-கும்
ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ;-ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் ;
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்;-தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் ;யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் ;
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் ;-என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
Saturday, June 27, 2009
யேசு ராசா எனை ஆளும் நேசா கீர்த்தனை 159
யேசு ராசா -எனை-ஆளும் நேசா !
சரணங்கள்
மாசிலா மணி ஆன முச்சுடர்
மேசியா அரசே ,-மனு
வேலே, மாமறை நூலே , தேவ செங்
கோலே ,இங்கெனின் மேலே அன்பு செய் - யேசு
தாவீ தரசன் மைந்தா -நின்
சரணம் சரணம் ,எந்தா !-சதா
னந்தா வா னந்தா, உ
வந்தாள்; மிக வந்தனம் ,வந்தனம் !- யேசு
ஐயா, என் மனம் ஆற்றி ,-உன
தடிமை என்றனைத் தேற்றிக் -குண
மாக்கி ,வினை நீக்கிக் கை
தூக்கி ,மெய் பாக்கியம் கொடு -யேசு
சுத்த திருத்துவ வஸ்துவே ,-சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே ,-பரி
சுத்தனே ,கரி சித்தெனை இ
ரட்சித் தடிமை கொள் ; நிததியம் தோத்திரம் -யேசு
மங்களம் ஈசாவே, -வளம் மிகும்
சங்கையின் ராசாவே ,-நரர்
வாழ்வே ,மன் னாவே, மெய்த்
தேவே , உமக கோசன்னாவே !- யேசு
Tuesday, June 23, 2009
இம்மட்டும் ஜீவன் தந்த கீர்த்தனை 306
பல்லவி
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்திரிப்போமாக.
அனுபல்லவி
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் .-இம்
சரணங்கள்
காலம் சொல் போல் கழியும் ,தண்ணீரைப் போல் வடியும் ,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும் ,சீலம் எல்லாம் குறையும் ,
மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது ;
கோலப் புதுமைக்கும் , நீர் குமிழிக்கும் ,புகைகுமே
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் .-இம்
பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
பரம பாதையைத் தொடர்ந்தோம் ;
வலிய தீமையை வென்றோம் ;நலியும் ஆசையைக் கொன்றோம் ;
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கவி என்ற தெல்லாம் விண்டோம் ;கர்த்தாவின் மீட்பைக் கண்டோம் ;
காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் .-இம்
சன தேசம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசிர்வதித்துக
கண்ணோக்கி எல்லார் மேல அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து ,தமது தேவ
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் -இம்
Monday, June 15, 2009
என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா? கீர்த்தனை 72
பல்லவி
என்றைக்கு காண்பேனோ என் ஏசு தேவா ?
அனுபல்லவி
குன்றாத தேவ குமாரனைத் தானே நான் - என்
சரணங்கள்
பரகதி திறந்து பாரினில் பிறந்து ,
நரர் வடிவாய் வந்த ராஜ உல்லசானை-என்
ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து ,
சிந்தையில் உவந்தவசீகர சினேகனை - என்
மாசிலா நாதன் மாமறை நூலன் ,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்
Saturday, June 6, 2009
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் கீர்த்தனை 77
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்;ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்.
அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு ,பரம பொற்பாதனுக்கு ,
நேரேறு போதனுக்கு,நித்திய சங்கீதனுக்கு . -சீர்
அனுபல்லவி
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் ;
அகிலப் பிரகாசனுக்கு,நேசனுக்கு மங்களம் ;
நீதிபரன் பாலனுக்கு ,நித்திய குணாளனுக்கு,
ஓதும் அனுகூலனுக்கு ,உயர் மனுவேலனுக்கு ;-சீர்
மானாபி மானனுக்கு ,வானனுக்கு மங்களம் ;
வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம் ;
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு,
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு . -சீர்
பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் ;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் ;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு ,
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு ,- சீர்
துதி தங்கிய பரமண்டல கீர்த்தனை 74
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
சரணங்கள்
அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன் .
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் .- துதி
மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்.
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் .- துதி
திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் .-
அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன் ,
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் .-துதி
சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்.
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் .-துதி
விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன் .
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் -துதி
Saturday, May 30, 2009
எங்கே யாகினும் ஸ்வாமி கீர்த்தனை 188
எங்கேயாகினும் -ஸ்வாமி-எங்கேயாகினும் ,
அங்கே யேசுவே,-உம்மை -அடியேன் பின்செல்லுவேன் .
சரணங்கள்
பங்கம் பாடுகள் -உள்ள -பள்ளத்தாக்கிலும் ,
பயமில்லாமல் நான் -உந்தன் -பாதம் பின்செல்வேன் .-எங்கே
வேகும் தீயிலும் -மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் ,
போகும் போதும் நான் -அங்கும் ஏகுவேன் பின்னே -எங்கே
பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் ,
பதைக்காமல் நான் -உந்தன் -பக்கம் பின்செல்வேன் -எங்கே
எனக்கு நேசமாய் -உள்ள -எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை -எங்கும் பின்செல்வேன் -எங்கே
உந்தன் பாதையில் -மோசம் -ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் -உம்மால் -மாறிப் போகுமே - எங்கே
தேவையானதை -எல்லாம் -திருப்தியாய்த் தந்து ,
சாவு நாள் வரை -என்னைத் தாங்கி நேசிப்பீர் -எங்கே
ஜீவித்தாலும் நான் -எப்போ -செத்தாலும் ஐயா!
ஆவலாகவே -உம்மை அடியேன் பின்செல்லுவேன்
Wednesday, May 27, 2009
மறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267
மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்
சரணங்கள்
திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற
விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற
கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற
நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற
நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற
வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற
Wednesday, May 20, 2009
மன்னுயிர்க்காக தன்னுயிர் விடுக்க கீர்த்தனை 20
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்
இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்
வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்
நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்
மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்
தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்
ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்
வரவேணும் என தரசே கீர்த்தனை 64
வர வேணும் ,என தரசே ,
மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .
அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர பிரகாசா ,
அசரீரி ஒரே சரு வேசா !- வர
வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,
ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,
தாதாவும் தாய் சகலமும் நீயே :
நாதா உன் தாபரம் நல்குவாயே.- வர
படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,
முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,
இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் ,-வர
வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,
ஞானகரமே, நடு நிலை யோவா ,
நண்பா , உனத நன்மையின் மகா தேவா !
Saturday, April 25, 2009
பாடித் துதி மனமே கீர்த்தனை 19
பாடித் துதி மனமே ;பரனைக் கொண்டாடித்
துதி தினமே .
அனுபல்லவி
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்- பாடி
சரணங்கள்
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவ பரன் இந்த காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து -பாடி
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தரம் எமை
மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷ த்துக்காக- பாடி
எத்தனை தீர்க்கர் ,அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் ,இரத்த சாட்சிகள் ,
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் -பாடி
Tuesday, April 21, 2009
நம்பி வந்தேன் மேசியா கீர்த்தனை 167
சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பி வந்தேனே .
சரணங்கள்
தம்பிரான் ஒருவனே , தஞ்சமே தருவனே;- வரு
தவீது குமார குரு பரமனுவேலே , நம்பி வந்தேனே ,-
நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் ;- நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பி வந்தேனே .-
நாதனே கிருபை கூர் ; வேதனே , சிறுமை தீர் ,- அதி
நலம் மிகும உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே.-
பாவியில் பாவியே , கோவியில் கோவியே கண
பரிவுடன் அருள் புரி அகல விடாதே; நம்பி வந்தேனே,-
ஆதி ஓலோலமே பாதுகா காலமே; உன
தடிமைகள் படு துயர் மெத்த நம்பி வந்தேனே
Monday, April 13, 2009
ஏசுவையே துதி செய் கீர்த்தனை 73
ஏசுவையே துதி செய்
சரணங்கள்
மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து
அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன
எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
Monday, April 6, 2009
ஆமென் அல்லேலுயா கீர்த்தனை 59
ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா
ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா
அனுபல்லவி
ஓம் அனாதி தந்தார், இறந்
துயிர்த்தெழுந்தரே, உன்னதரே -
சரண்ங்கள்
வெற்றி கொண்டார்ப்பரித்து-கொடும் வே
தாளத்தை சங்கரித்து, முறித்து ;
பத்ராசனக் கிறிஸ்து -மரித்து
பாடுபட்டுத தரித்து , முடித்தார் .
சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து ,-விழுந்து ,
ஜீவனே விடிந்து ,- தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது .-
வேடம் நிறைவேற்றி -மெய் தோற்றி ,
மீட்டுக் கரையே ற்றி , -பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி ,- கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித் தார்
Friday, April 3, 2009
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.
நாம தாதி பிதாவின் திரு பாலர் இவர்
அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்.-
நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நாம தாயர் இவர்.-
ஆதி நரர் செய்த தீதறவே ,
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் .-
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,
அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே .-
மெய்யாகவே மே சியாவுமே
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினரே, முடி சூட்டினாரே