Showing posts with label ஆ. சட்டம் பிள்ளை. Show all posts
Showing posts with label ஆ. சட்டம் பிள்ளை. Show all posts

Friday, November 6, 2009

சகோதரர்கள் ளொருமித்து கீர்த்தனை 223

சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .

எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.

தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .