Wednesday, April 28, 2010
கிஞ்சிதமும் , நெஞ்சே , கீர்த்தனை 197
கிஞ்சிதமும் , நெஞ்சே , அஞ்சிடாதே ;-நல்ல
கேடகத்தைப் பிடி நீ; -விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ .
அனுபல்லவி
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெயகின்ற வேலையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ -கிஞ்சித
பாவத்தை வெறுக்க,ஆபத்தைச் சகிக்க ,
பத்தியில் தெளிக்கவும்,-நித்ய
ஜீவனைப் பிடிக்க ,லோகத்தை ஜெயிக்க ,
திறமை அளிக்கவும் ,
சாவே,உன் கூர் எங்கே? பாதாளமே ,உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும் ,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல ஆயுதம் .-கிஞ்சித
பண்டையர் அந்த பரிசையினால் அல்லோ ,
கண்டைந்தார் பேறு?-நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும்;தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது ,மாம்பல
காரியங்களையும் பார்;இது மா ஜெயம் .- கிஞ்சித
ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் ;அதின்
தோற்றமும் முடிவும் எசுபரன் செயல்
துணை அவர் பாதம் ;
ஏற்றர வணைக்கவே,பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே ,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ.- கிஞ்சித
Friday, October 30, 2009
மங்களம் ஜெயமங்களம்! கீர்த்தனை 319
மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு
மங்களம்! ஜெயமங்களம்!
ச்ரணங்கள்
எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும்
பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும் .- மங்களம்
நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத்
தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும்.- மங்களம்
சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப்
பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும் .-மங்களம்
இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும்
செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு .- மங்களம்
Wednesday, September 2, 2009
நெஞ்சமே ,தள்ளாடி நொந்து கீர்த்தனை 204
நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .
சரணங்கள்
தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச
அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச
ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச
பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச
கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச
ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச
Thursday, June 25, 2009
ஒரு மருந்தரும் குரு மருந்-து கீர்த்தனை 106
ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் கண்டேனே .
அனுபல்லவி
அருள் மருந்துடன் ஆனந்த மருந்து ,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து ,
வரும் வினைகள் மாற்றும் மருந்து
வறுமையுளோர்க்கே வாய்த்த மருந்து -குரு
சரணங்கள்
சிங்கார வனத்தில் செழித்த மருந்து ,
ஜீவ தரு மீதில் படர்ந்த மருந்து ,
அங்கு விளை பவம் மாற்றும் மருந்து ,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து -குரு
மோசே முதல் முன்னோர் காணா மருந்து ,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து ,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து -குரு
தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து ,
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து ,
மனுவை உலகினில் வந்த மருந்து - குரு
செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து ,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து ,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து -குரு
Wednesday, June 24, 2009
ஏசுவே கிரு பாசனப்பதியே கீர்த்தனை 153
பல்லவி
யேசுவே கிரு பாசனப்பதியே ,கெட்ட
இழிஞன் எனை மீட்டருள் ,
ஏசுவே,கிரு பாசனப்பதியே
சரணங்கள்
காசினியில் உன்னை அன்றி ,தாசன் எனக் காதரவு
கண்டிலேன் ,சருவ வல்ல மண்டலாதிபா !
நேசமாய் ஏழைக்கிரங்கி,மோசம் அணுகாது காத்து
நித்தனே, எனைத் திருத்தி ,வைத்தருள் புத்தி வருத்தி ,-யேசு
பேயுடைச் சிறையதிலும் காய வினைக் கேடதிலும் , பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன் ;
தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்று திரம் விட்ட
தேவனே , எனைக் கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி , -யேசு
சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி
தீரமுள்ள எங்கள் உப கார வள்ளலே ,
குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா ? எனைச் சதிக்கும்
குற்றங்கள் அறவே தீர்த்து ,முற்று முடியக் கண் பார்த்து ,- யேசு
பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை ,
புண்ணியனே உம சரணம் நண்ணி அண்டினேன் ;
எல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி ?
இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச சொரிந்து -யேசு
Thursday, May 28, 2009
உன்றன் சுய மதியே கீர்த்தனை 121
உன்றன் சுயமதியே நெறி என் று
உகந்து சாயாதே ;-அதில் நீ
மகிழிந்து மாயாதே .
சரணங்கள்
மைந்தனே ,தேவ மறைப்படி,யானும்
வழுத்தும் மதி தனைக் கேளாய் ;-தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்; அருள் சூழாய் .-உன்
சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ ,
வந்து விளையுமே கேடு ;-அதின்
தந்திர போக்கை விட்டோடு ;கதி தேடு ;-உன்
துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே ;-தீயர்
கெட்ட வழியில் நில்லாதே ;-அது தீதே ;-உன்
சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே ;-அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே; அதொண்ணாதே,-உன்
நான் என்ற எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் ; -அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் ;மனஸ்தாபம்; -உன்
Tuesday, May 5, 2009
வாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203
வாரா வினை வந்தாலும் , சோராதே, மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே .
சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா
உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே.- வாரா
பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே.- வாரா
தன உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே ,நல அருளை விடாதே .- வாரா
வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே !- வாரா
Thursday, April 23, 2009
வாரா வினை வந்தாலும் சோராதே,மனமே கீர்த்தனை 203
வாரா வினை வந்தாலும் ,சோராதே ,மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்லதாரகமே
சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா
உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே .- வாரா
பெற்ற பிதாப் போல் உன் குற்றம் எண்ணாதே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே .- வாரா
தன் உயிர் ஈந்திட்ட உன் ஏசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே, நல அருளை விடாதே .- வாரா
வையகமே உனக்குய்ய ஓர் நிலையே?
வானவனை முற்றும் தான் அடைவாயே ! - வாரா
Wednesday, April 1, 2009
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசர்
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா
முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பாடுவோம்
சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்
பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் .
பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீ ணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.
குருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம்
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்