Showing posts with label த.ஐயாத்துரை. Show all posts
Showing posts with label த.ஐயாத்துரை. Show all posts

Monday, July 27, 2009

பல்லவி

அருமருந்தொரு சற்குரு மருந்து ,

அகிலமீடேற இதோ திவ்யமருந்து .

சரணங்கள்

திருவளர்தெய்வம் சமைத்த மருந்து ,

தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து .

இருதய சுத்தியை ஈயுமருந்து ,

இகபரசாதனம் ஆகும் மருந்து .

ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து ,

அவனியோர் அழியா கற்பக மருந்து .

சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து ,

ஜீவன் முத்தி தருஞ்சேணுள்ள மருந்து .

பணமில்லை இலவசமான மருந்து,

பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து .

என்றும் அழியாத தேவருள் மருந்து ,

என்பவநீக்கும் யேசு நாதர் மருந்து .

Thursday, June 11, 2009

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே கீர்த்தனை 16.

விண்மணி பொன்மணி ,வித்தக மணியே ,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே ,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே,
சோதியாய் இங்கெழந் தருள் சூடாமணி !

பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே ,
பாக்கியம் தருஞ் சீவ காருண்ய மணியே ,
கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக்
கண்டனர் உரை கேட்டக் கண்ணருள் மணியே !

மங்கை சீயோன் மகள் பூண்ட வான மணியே ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அமமணியே ,
நங்கை மரிகன்னி யீன்ற கண்மணியே
நரர் சுரர் போற்றிடு நாயக மணியே

Monday, April 13, 2009

இவரே பெருமான் கீர்த்தனை 75

இவரே பெருமான் மறற
பேர் அளவே பூமான், -இவரே பெருமான்

சரண்ங்கள்
கவலைக் கிடங்கொடுத் தறியார்,- வேறு
பவவினை யாதுமே தெரியார் ,இப்
புவன மீது நம்க்குரியார்

குருடர்களுக் குதவும் விழியாம்,-பவ
கரும இருளை நீக்கும் ஒளியாம்,-தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

பவபிணி தீர்க்கும் பரிகாரி,-சொல்லும்
வல்லமையில் மிக்க உபகாரி- எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி

அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் -கொடு
மறம் விடு பவர்க்கருள் முத்தன் -இங்கே
இறந்தோர்க் குயி ரீயும் கர்த்தன்

அலகை தனை ஜெயித்த வீரன் ,-பல
உலகை ரட்சித்த எழிற் பேரன், விண்
ணுலகு வாழ் தேவ குமாரன்.

பொன்னுலகந் தனில்வாழ் யோகன், அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் , நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன்.-

Wednesday, April 8, 2009

கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண் மண் உண்டாக்கின வித்தகனிட மிருந்
தெண்ணிலா வொத்தசை எந்தனுக்கே வரும்

காலைத் தள்ளாட வொட்டார்,உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின் ரிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங் காரவர்.-

பக்க நிழல் அவரே -எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனக் சேதப் படுத்தாது
முக்காலம் நின்ரென்னை நற் காவல் புரியவே .-

எல்லாத் தீமை கட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும் ,
பொல்லா உலகினில் போக்கு வரத்தையும்
நல்லாத்தூமாவையும் நாடோறும் காப்பவர்