Showing posts with label த. யோசேப்பு. Show all posts
Showing posts with label த. யோசேப்பு. Show all posts

Saturday, May 22, 2010

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் கீர்த்தனை 184

பல்லவி

தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி
ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ

Monday, April 19, 2010

வேறு ஜென்மம் வேண்டும் கீர்த்தனை 122

பல்லவி
வேறு ஜன்மம் வேண்டும் ,- மனம்
மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

சரணங்கள்
கூறு பரிசுத்தர் மாறில்லா தேவனின்
தேறுதலான வின்பெறு பெற இங்கே.- வேறு

பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய -வேறு

மானிடரின் அபிமானத்தினாலல்ல ,
வானவரின் அருள் தானமாக வரும் ;- வேறு

ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய ;- வேறு

மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே ,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள். - வேறு

மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும் ,
விண்ணினில் தூயராய் தண்ணனி கொள்ளவும் -வேறு

Monday, May 18, 2009

கதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன் .

கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே -என் இஷ்டம் .

ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் -போற்றுவேன் .

ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் -உயர்த்துவேன் .

மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை -சிந்திப்பேன் .

அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே -ஒதுங்குவேன் .

ஆத்துமம் தேவனைத் அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் .