Showing posts with label அ.சவரிமுத்து. Show all posts
Showing posts with label அ.சவரிமுத்து. Show all posts

Friday, April 3, 2009

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுர மாமே ;-
அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே .

காசினிதனிலேநேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;- பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத தொலைத்தார்; கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;- பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே .

காலையில் பனி போல் மயமாய் யாவும் உபாயமாய் நீங்கிவிடும் ;
என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் ; -நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துணைக் காப்பார்; ஆசைகொள் நீ மனமே ;-

பூலோகத்தாரும் மேலோகத்தரும் புகழ்ந்து போற்று நாமம் ;அதைப்
பூண்டு கொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ மனமே