Showing posts with label மரியான் உபதேசியார். Show all posts
Showing posts with label மரியான் உபதேசியார். Show all posts

Wednesday, April 28, 2010

கர்த்தரின் பந்தியில் வா கீர்த்தனை 255

பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா,- சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா .
அனுபல்லவி
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி -கர்த்தரின்

சரணங்கள்
ஜீவா அப்பம் அல்லோ? -கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? -உனக்காய்
பகிரப்பட்டதல்லோ?
தேவ குமாரனாம் ஜீவா அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றுன் பிழைத்திட -கர்த்தரின்

தேவ அன்பைப் பாரு ;கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு;
பாவக் கேட்டைக் கூறு ;-இராப்போசன
பந்திதனில் சேறு;
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அந்நியன் ஆகாதே .-கர்த்தரின்

அன்பின் விருந்தாமே;-கர்த்தருடன்
ஐக்யப் பந்தி யாமே;
துன்பம் துயர் போமே ;-இருதயம்
சுத்தத் திடனாமே ;
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிப்போ வா- கர்த்தரின்

Saturday, June 6, 2009

சுந்தர பரம தேவ மைந்தன் கீர்த்தனை 86

பல்லவி
சுந்தர பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம் புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் !

அனுபல்லவி
அந்தரம் புவியும் தந்து ,சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார் ;நமை ஒன்றாய் கூட்டினார் ;அருள் முடி
சூட்டினார் ;கிருபையால் தேற்றினாரே ,துதி- சுந்

சரணங்கள்

பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
வேத பிதவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே ,
கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள் ;-பவத் துயர்
போடுங்கள் ;-ஜெயத்தைக் கொண்
டாடுங்கள்; துதி சொல்லிப் பாடுங்கள் ,பாடுங்கள் என்றும் -சுந்

விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்ல பரண் எனத் துதி சொல்லி ஏத்தவே ,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணிய குமாரனைக் கொண்
டாடிட ,-அவர் பதம்
தேடிட ,-வெகு திரள்
கூடிடத் துதி புகழ் பாடிடப் பாடிட என்றும் -சுந்

சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங் கிருபை தங்கி வாழவே ,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே ,
உத்தம போதகர்களும் சத்ய திருச் சபைகளும் ,
உயர்ந்து -வாழ, தீயோன்
பயந்து -தாழ, மிக
நயந்து க்ரிஸ்துவுக்கு ஜெயந்தான் , நயந்தான் என்றும்