Wednesday, May 27, 2009

மறவாதே மனமே தேவ சுதனை கீர்த்தனை 267

பல்லவி

மறவாதே மனமே,- தேவ சுதனை
மறவாதே மனமே ,- ஒருபொழுதும்

சரணங்கள்

திறமதாக உனைத் தேடித் புவியில் வந்து ,
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை-மற

விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை- மற

கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ ,
மட்டில்லாத பரன் மானிடனான தயவை -மற

நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அள்ளிதிவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் -மற

நிததம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை -மற

வருடம் வருடம் தோறும் மாறப் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை- மற

Friday, May 22, 2009

ஆத்துமமே என் முழு உள்ளமே கீர்த்தனை 70

ஆத்துமமே என் முழு உள்ளமே ,-உன்
ஆண்டவரைத் தொழுதேத்து ;- இந்நாள் வரை
அன்பு வைத்தாரித்த -உன்
ஆண்டவரைத் தொழுதேத்து


சரணங்கள்
போற்றிடும் வானோர் பூ தலத்து ள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்து

தலை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத -

தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்த தருளும் மேலான - ஆத்து

வாதை நோய் ,துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்து

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் -

துதி முகுந்தேறத் தோத்தரி தினமே ,
இதயமே , உள்ளமே ,என் மனமே .

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் கீர்த்தனை 69

பல்லவி

என்ன என் ஆனந்தம் !என்ன என் ஆனந்தம் !

இயம்பலாகாதே ,

மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்

மன்னித்து விட்டாரே .

சரணங்கள்

கூடுவோம் ,ஆடுவோம் , பாடுவோம் ,நன்றாய்

மகிழ் கொண்டாடுவோம் ;

நாடியே நம்மை தேடியே வந்த

நாதனைப் போற்றிடுவோம் .

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்

பரிகரித்தாரே;

தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து

தேற்றியே விட்டாரே .

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு

அருளினதாலே ;

நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி

பகர வேண்டியதே .

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல வீட்டில்

ஜெயக் கொடியுடனே,

மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற

மன்னனைத் தோத்தரிபோம்.

Thursday, May 21, 2009

இரங்கும் இரங்கும் கருணை வாரி கீர்த்தனை 142

இரங்கும்,இரங்கும் ,கருணை வாரி ,
ஏசு ராசனே ,-பவ நாசநேசனே !
சரணங்கள்
திறங்கொண்டாவி வரங் கொண்டுய்யச்
சிறுமை பார் ஐயா.- ஏழை வறுமை தீர் ஐயா.- இர

அடியன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகின்றேன் ;-மிகப் பயந்து சாகின்றேன் .-இர

தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ,ஐயா ,-தெரிவைப் புரிகிலேன் ,ஐயா .-இர

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ,ஐயா ;-தயை -புரிந்து மீள் ,ஐயா ,-இர

Wednesday, May 20, 2009

கிருபை புரிந்தெனை ஆள் கீர்த்தனை 154

பல்லவி

கிருபை புரிந்தெனை ஆள் ;-நீ பரனே

கிருபை புரிந்தெனை ஆள்

சரணங்கள்

திரு அருள் நீடு மெய்ஞ்ஞானதிரித்து ,

வரில் நரனாகிய மா துவின் வித்து !- கிரு


பண்ணின பாவமெலாம் அகல்வித்து ,

நின்னயமாய் மிகவுந் தயை வைத்து ,-கிரு


தந்திர வான் கடியின் சிறை மீட்டு

எந்தை ,மகிழ்துன்றன் அன்பு பாராட்டு ,-கிரு


தீமை உறும் பல ஆசையை நீக்கிச்

சாமி ! என்னை உமக்காலயம் ஆக்கி .- அழ


தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து

நல்வினையே செய் திராணி அளித்து .-கிரு


அம்பரமீ துறை வானவர் போற்ற

கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த



மன்னுயிர்க்காக தன்னுயிர் விடுக்க கீர்த்தனை 20

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

தெய்வன்பின் வெள்ளமே கீர்த்தனை 8

தெய்வன்பின் வெள்ளமே ,திருவருள் தோற்றமே ,
மெய்ம் மன தானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா , நின் அடி பணிந்தேன் .


மூர்க்ககுனம் கோபம் மோகம் சிற்றின்பமும்
மேற்கொள்ளும் நாச ஏக்கம்
தாக்கிடத் தடுமாறி தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்.


சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோயான் ?
புந்திக்கமலமாம் பூமாலை கோத்து நின்
பொற்பதம் பிடித்துக் கொள்வேன் .



பாவச் சேற்றில் பலவேளை பலமின்றி
தேவே தவறிடினும்
கூவி விளித்துந் தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா !

ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப் பீடம் படைப்பேன்;
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன் .

மரணமோ ஜீவனோ ,மறுமையோ ,பூமியோ ,
மகிமையோ ,வருங்காலமோ,
பிற சிருஷ்டியோ ,உயர்ந்ததோ ,தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை ?