Wednesday, May 20, 2009

வரவேணும் என தரசே கீர்த்தனை 64

பல்லவி

வர வேணும் ,என தரசே ,

மனுவேல் ,இஸ்ரேல் சிரசே .

அனுபல்லவி

அருணோ தயம் ஒளிர பிரகாசா ,

அசரீரி ஒரே சரு வேசா !- வர

வேதா கருணா கரா , மெய் யான பரா பரா ,

ஆதார நிராதரா ,அன்பான சகோ தரா ,

தாதாவும் தாய் சகலமும் நீயே :

நாதா உன் தாபரம் நல்குவாயே.- வர

படியோர் பவ மோசனா ,பரலோக சிம்மாசனா ,

முடியா தருள் போசனா, முதன் மா மறை வாசனா ,

இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் ,

இமையவர் அடி தொழு மன்மையின் மேன்மை யின் எந்தாய் ,-வர

வானோர் தொழும் நாதனே, மறையாகம் போதனே ,

கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ,

ஞானகரமே, நடு நிலை யோவா ,

நண்பா , உனத நன்மையின் மகா தேவா !

Monday, May 18, 2009

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே கீர்த்தனை 7

துதிக்கிறோம் உம்மை -வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் -உமை மா அரசே
தோத்ரம் உம மாட்சிமைக்கே -பரனே
துந்துமி மாட்சிமைக்கே -பிதாவே .

சுதனே யிரங்கும்-புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த - தூய செம்மறியே,
சுத்தா ஜெபங் கேளும் -பரன்வலத்
தோழா ஜெபங் கேளும் -கிறிஸ்தே .

நித்ய பிதாவின் -மகிமையில் நீரே
நிமலாவியினோ - டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே -உன்னத
நேயருக் கர்ச்சனையே - ஆமென்

கதிரவன் எழுகின்ற காலையில் கீர்த்தனை 279

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே - எழுந்திராய்.

வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன் .

கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே -என் இஷ்டம் .

ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் -போற்றுவேன் .

ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் -உயர்த்துவேன் .

மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை -சிந்திப்பேன் .

அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே -ஒதுங்குவேன் .

ஆத்துமம் தேவனைத் அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம் போல் என்னைக் காக்கிறார் .

சருவலோகதிபா நமஸ்காரம் கீர்த்தனை 5

சருவ லோகதிபா நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம் !
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம் .

திரு அவதாரா, நமஸ்காரம் !
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம் !
தரணியின் மானுடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம் !

பரிசுத்த ஆவி நமஸ்காரம் !
பரம சற்குருவே நமஸ்காரம் !
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம் !


முத்தொழிலோனே நமஸ்காரம் !
மூன்றில் நின்றோனே நமஸ்காரம் !
கர்த்தாதி கர்த்தா, கருணை சொரூபா,நித்ய திரியேகா, நமஸ்காரம் .

Tuesday, May 5, 2009

ஏசுவைப் போல நட கீர்த்தனை 220

ஏசுவைப் போல நட -என் மகனே !
ஏசுவைப் போல நட -இளமையில்

அனுபல்லவி

நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,
நேயமுடன் நர தேவனாய் வந்த -



சரணங்கள்

பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்
பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;
சின்ன வயதிலே தேசிகரைக் கேட்ட
சீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-



சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்
சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,
எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாது
இருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த --


எனை யிளைஞரோ டீன வழி செல்லா
எவருக்கும் சிறந்த மாதிரியாய் நின்று
ஞானம தேவ கிருபை ஆவி பெலன் கொண்டு நரரின் தயவிலும் நாளாய் வளர்ந்தவுன்

வாரா வினை வந்தாலும் கீர்த்தனை 203

பல்லவி

வாரா வினை வந்தாலும் , சோராதே, மனமே ;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே .

சரணங்கள்
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும் ,
அஞ்சாதே ,ஏசுபரன் தஞ்சம் விடாதே .- வாரா

உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே.- வாரா

பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே.- வாரா

தன உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே .- வாரா

மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும் ,
மருள விழாதே ,நல அருளை விடாதே .- வாரா

வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே !- வாரா

நித்தம் முயல் மனமே கீர்த்தனை 219

பல்லவி
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ

சரணங்கள்


அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய் வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்

அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்

தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்

யேசுவே உன்றனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்

எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்

மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்