Wednesday, September 2, 2009

இயேசு நான் நிற்கும் கனமளையே கீர்த்தனை 183

பல்லவி

இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மாற்ற

எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே .

சரணங்கள்

இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன்

எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;

நேசனையுங் கூட நம்பேன்.-நான்

இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு

இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்

உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;

உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்

உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு

பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்

பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;

இருதயத்தின் நிலை அசைய -அப்போ

தேசுவே என் முழு நம்பிக்கையாமே.-இயேசு

சோதியாய் அவர் வரும் போது-நான்

சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ;

நீதியாம் ஆடை தரிப்பேன் ,-சதா

நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் - இயேசு

நெஞ்சமே ,தள்ளாடி நொந்து கீர்த்தனை 204

பல்லவி

நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .

சரணங்கள்

தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,-நெஞ்ச

அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் -உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்-நெஞ்ச

ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,-மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச

பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,-மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .-நெஞ்ச

கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும்,-எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .-நெஞ்ச

ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்
தண்ணலே, உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் -நெஞ்ச