Tuesday, November 17, 2009

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)

1. அல்லேலுயா துதி மகிமை - என்றும்
அல்லேலுயா துதி மகிமை
இயேசு ராஜா! எங்கள் ராஜா !
என்றென்றும் போற்றிடுவோம் .- ஓசன்னா

2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை! கலக்கம் இல்லை !
கர்த்தர் நம்முடனே -ஓசன்னா

3.யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமும் இலை! கலக்கம் இல்லை!
மீட்பர் நம்முடனே - ஓசன்னா

4. பாதாளம் வாய் திறந்தாலும்
மரணமே எதிர் வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை !
இயேசு நம்முடனே - ஓசன்னா

எழுதியவர்
சாம் ஜெபத்துரை

இயேசு ராஜனின் திருவடிக்கு புத்தெழுச்சி பாடல்கள்

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!
ஆத்மா நாதரின் மலரடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!

சரணங்கள்
பார் போற்றும் தூய தூய தேவனே,
மெய் ராஜாவே எங்கள் நாதனே ,
பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே
சாரணம்! சரணம்! சரணம் !- இயேசு ராஜனின்

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே,
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே ;
சரணம்!சரணம்! சரணம்!

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே,
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே i
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன் ;
சரணம்! சரணம்! சரணம்!

எழுதியவர்
திரு. A.RJ. சத்யா

Saturday, November 14, 2009

சேனைகளின் கர்த்தரே கீர்த்தனை 238

பல்லவி

சேனைகளின் கர்த்தரே ! நின்
திருவிலம் அளவற இனிதினிதே!

அனுபல்லவி
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத .-

சரணங்கள்

திருவருளிலமே , கணுறும் உணரும்
தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -

ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய .- சேனை

புவியோர் பதிவான் புகநிதியே !
புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் !

பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவேனே; எனச்சொலி
பேனிடத்துணை ஈவையே !
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்
பிசகொழியே, திடமளியே!
பெருமலையினிலரு முயிர் தரும் .- சேனை

ஆலய மது நிறைவாக ,
அவைக் குறை வொழிநதேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ,
ஆலய பர னேச
ஆசுக மது வீச,
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது?

Monday, November 9, 2009

பாதைக்கு தீபமாமே கீர்த்தனை 213

பல்லவி

பாதைக்கு தீபமாமே
பரிசுத்த ஆகமம் -மா நல்ல



சரணங்கள்

பாதைக்கு தீபமாமே , பாவிக்கு லாபமே ,
பேதைக்கு திரவியமே , பரிசுத்த ஆகமம்.-மா நல்ல



தேனின் மதுரமே , திவ்ய அமுதமே ,
வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம்- மா நல்ல

நீதியி னாதாரமே நெறியுள்ளோர் செல்வமே,
ஓதரும் மேன்மையாமே பரிசுத்த ஆகமம் .- மா நல்ல

ஞான சமுத்திரமே , நல்ல சுமுத்திரையே ,
ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்ட ஆகமம் .- மா நல்ல

உலகோர்க் குயிர் துணை , உண்டோ அதற்கினை ?
அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம் - மா நல்ல

எல்லையில்லா விஸ்தாரம் ,எவர்க்கும் பர மாகரம் ,
வல்ல பரனின் வேதம் ஆகமம்



மகிழ் மகிழ் மந்தையே, கீர்த்தனை 63

பல்லவி

மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !

அனுபல்லவி
மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;
நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று - மகிழ்

சரணங்கள்
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,
ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ்

தந்தை வளபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா !
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ;
மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று- மகிழ்

மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் ,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா !
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று -மகிழ்

பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா !
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று

Friday, November 6, 2009

வையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68

பல்லவி

வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க .

அனுபல்லவி

பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க ,
போற்பதிதநிர் பரண் சேயரைச் சேர்க்க - வைய

சரணங்கள்

வான்கள் மடமடபோ டொழிந்திடவே,
மகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே ,
பானுவும் மதி அனைத்து மங்கிடவே
பஞ்ச பூதியங்களுந் தானழிந்திடவே .- -வைய

முக்கிய தூதநெக்காளமே தொனிக்க
முன் மரித்தொரெலாந் தாமெழுந்திரிக்க
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க ,
அக்கண முயிருள்ளோர் மறு உருத்தரிக்க
ஆண்டவர் வருகிறார் ,பக்தர்கள் களிக்க - வைய

யாவரின் சிந்தை செய்கையும் வெளிபடற்-கு
இரண்டு புத்தகங்களுந் திறந்த்தரவர்க்கு ப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு -வைய

அடைக்கலன் இயேசுவை அறிந்தவர் நாமம்
அழிந்திடாதவர்களின் வாழ்வது ஷேமம் ;
படைத்திடுவாயிந்தக் கனமுனை .ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம் -வைய

தேவா இரக்கம் இல்லையோ ? கீர்த்தனை 148

பல்லவி

தேவா இரக்கம் இல்லையோ ?-இயேசு

தேவா இரக்கம் இல்லையோ ?

அனுபல்லவி

ஜீவா,பரப்ரம ஏகோவா திரித்துவத்தின்

மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ,ஒரே .- தேவா

சரணங்கள்

எல்லாம் அறிந்த பொருளே,-எங்கள்

இல்லாமை நீக்கும் அருளே ,-கொடும்

பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்

கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதா!-தேவா

எங்கும் நிறைந்த ஜோதியே ,-ஏழைப்

பங்கில் உறைந்த நீதியே ,-எங்கள்

சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்

துங்க இசரவேலின் வங்கிஷ் க்ரீடாதிபதி !- தேவா

வேதாந்த வேத முடிவே ,-ஜெக

ஆதாரம் ஆன வடிவே ,-ஐயா,

தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே ; யேசு

நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை

பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் கீர்த்தனை 268

பல்லவி

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .

அனுபல்லவி

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்

சரணங்கள்

பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் - பாலர்

தேடி வந்தலையும் தேசிகருண்டு ,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.--பாலர்

இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்

சகோதரர்கள் ளொருமித்து கீர்த்தனை 223

சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .

எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.

தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .