பல்லவி
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .
அனுபல்லவி
தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்
சரணங்கள்
பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் - பாலர்
தேடி வந்தலையும் தேசிகருண்டு ,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.--பாலர்
இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்
பள்ளிப் பருவத்தில் குருத்தோலையை கையில் ஏந்திக் கொண்டு நான் பாடிச் சென்ற இந்த பாடலை நினைவூட்டியதற்கு நன்றிகள் பல!
ReplyDelete