பல்லவி
மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !
அனுபல்லவி
மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;
நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று - மகிழ்
சரணங்கள்
வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,
ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ்
தந்தை வளபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா !
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ;
மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று- மகிழ்
மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் ,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா !
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று -மகிழ்
பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா !
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று
No comments:
Post a Comment