Wednesday, July 29, 2009
ஏசு கிறிஸ்து நாதர் கீர்த்தனை 93
ஏசு கிறிஸ்து நாதர்
எல்லாருக்கும் ரட்சகர் .
சரணங்கள்
மாசில்லாத மெய்த்தேவன்
மானிடரூ புடையார்
யேசுகிறிஸ்துவென்ற
இனிய நாமமுடையார் ;- ஏசு
அந்தர வானத்திலும்
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே ரட்சகர் ;-ஏசு
வம்பு நிறைந்த இந்த
வையக மாந்தர்கள் மேல
அன்பு நிறைந்த கர்த்தர்
அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு
தன்னுயிர் தன்னை விட்டுச்
சருவ லோகத்திலுள்ள
மன்னுயிர்களை மீட்க
மரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு
பாவத்தில் கோபம் வைப்பார் !
பாவி மேல கோபம் வையார் ,
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலம் ஆக நிற்பார்
Monday, July 27, 2009
அருமை ரட்சகா கூடி வந்தோம் கீர்த்தனை 259
அருமை ரட்சகா ,கூடி வந்தோம் ;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம் .
அனுபல்லவி
அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க .- அரு
சரணங்கள்
ஆராயும் எமதுள்ளங்களை ,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீர் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூறும் - அரு
ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பய பக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ .- அரு
உமதன்பின் பிரசன்னம் பெற்றோம் ;-உம-து
ஒலி முக தரிசன முற்றோம் ;
சமாதானம் ,அன்பு, சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும் .- அரு
கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்யம் ;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே ,வந்தனம் !- அரு
எங்கட்காய் உமை ஒப்புவித்தீர் ;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர் ;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம் ,
புண்ய நாதரே !-அரு
பந்திக் கெசமான் நீர் யேசுவே!- எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய .-அரு
.
ஆண்டவர் பங்காக அனைத்தையும் கீர்த்தனை 230
பல்லவி
ஆண்டவர் பங்காக அனைத்தையும் ,அவர்க்கே ,
அன்பர்களே ,தாரும்; -அதால் வரும்
இன்பந்தனைப் பாரும் .
அனுபல்லவி
வான்பல கனிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் ,பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால்- ஆண்
சரணங்கள்
வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே -அந்த
மேதகத்தை நன்றி ஞாபகம் செய்திட
விதித்தது தானே .
வேதனம் ,வியாபாரம் ,காலி , பறவையில் ,
வேளாண்மை , கைத்தொழில் ,வேறுவழிகளில் ,
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாக பிரதிஷ்டை பண்ணியே .-ஆண்
ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய
அருட்பணி பேண, -தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண ,
ஏழைகள் ,கைம்பெண்கள் ,அனாதப்பாலர்கள்
எதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட .-ஆண்
நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து ,-நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்பு கூர்ந்து ,
நன்மை புரிந்த பிதாவைக் கணம் பண்ண
நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும்
சம்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் ; மாவிந்தையல்லவோ? -ஆண்
வா பாவி மலைத்து நில்லாதே கீர்த்தனை 124
வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா
சரணங்கள்
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே ;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே ,
உள்ளபடி வாவேன் - வா
உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் ,
உன் பாவத்தைச் சுமந்தேன் ;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் ,பாவி ,வா -வா
கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ,
ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா -வா
விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன் .- வா
என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழந்து தள்ளேனே ;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே ,
வாராயோ ,பாவி ? - வா
பல்லவி
அருமருந்தொரு சற்குரு மருந்து ,
அகிலமீடேற இதோ திவ்யமருந்து .
சரணங்கள்
திருவளர்தெய்வம் சமைத்த மருந்து ,
தீனர் பாவப்பிணியைத் தீர்க்கு மருந்து .
இருதய சுத்தியை ஈயுமருந்து ,
இகபரசாதனம் ஆகும் மருந்து .
ஆத்மபசிதாகம் தீர்க்கு மருந்து ,
அவனியோர் அழியா கற்பக மருந்து .
சித்த சமாதானம் உண்டாக்கு மருந்து ,
ஜீவன் முத்தி தருஞ்சேணுள்ள மருந்து .
பணமில்லை இலவசமான மருந்து,
பாவிகளுக் கெளிதில் ஏற்படு மருந்து .
என்றும் அழியாத தேவருள் மருந்து ,
என்பவநீக்கும் யேசு நாதர் மருந்து .
Sunday, July 26, 2009
ராச ராச பிதா மைந்த கீர்த்தனை 91
பல்லவி
ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே !
அனுபல்லவி
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக -
சரணங்கள்
மாசிலாமணியே ! மந்தர ஆசிலா அணியே ! சுந்த்ர
நேசமே பணியே , தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே ! இறையான சாந்தனே ! மறை - ராச
ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே ,முந்த
வேதா பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே ;
பத ஆமனாமானா ! சுதனாமனாமனா! சித- ராச
மேன்மையா சனனே ,நன்மை மேவுபோசனனே ,தொன்மை
பான்மை வாசனனே ,புன்மை பாவ மோசனனே ,
கிருபா கரா நரா! சருவேசுரா ! பரா ,திரு - ராச
வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே ,மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான் ;சுரராடு கோவினான், பர -ராச
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் கீர்த்தனை 90
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் ;-எங்கள்
குருவேசு நாதர் பதங் கும்பிடுகிறேன் .
சரணங்கள்
அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் ;-எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன் ;
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் ;-பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் ;
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்;-நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன் ;
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்; தொனித்
தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் .-கும்
ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் ;-ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன் ;
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்;-தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்;
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் ;யூதர்
குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் ;
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் ;-என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
Monday, July 20, 2009
ஆத்தும ஆதாயம் செய்குவோமே கீர்த்தனை 226
ஆத்தும ஆதாயம் செய்குவோமே , -இது
ஆண்டவர்க்குப் பிரியம் ,- நாமதினால்
ஆசீர்வாதம் பெறுவோம் .
அனுபல்லவி
சாத்திரம் யாவும் தெரிந்த கிரிஸ்தையன்
தஞ்சதைப் பெற்று நாமிந்த மாவேலையில்
ஆத்திரமாக முயற்சி செயவோமாகில்
அற்புதமான பலனை அடையலாம் .-
சரணங்கள்
பாழுலக முழுதையும் ஒருவன் சம்
பாதித்துக் கொண்டாலும் ,- ஒரு
நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
நஷ்டப்படுத்திவிட்டால் ,
ஆளுந்துரையவ னாயிருந்தாலூமே,
அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
எம்பெருமான் கிரிஸ்தேசன்று சொன்னாரே .-ஆத்தும
கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
மட்டில்லா தேவ சுதன் -வானை
விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
விட்டதும் விந்தை தானே ;
துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை
இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே
Tuesday, July 7, 2009
ஜெப சிந்தை என்னில் தாரும் கீர்த்தனை 206
ஜெப சிந்தை என்னில் தாரும் , தேவா, -என்னை
அனுபல்லவி
அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா -
சரணங்கள்
உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச ,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச ,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச ,-பவ
தோஷமகலத் திரு ரத்தம் உள்ளிஞ்ச -ஜெப
இடைவிடாமல் செய்யும் எண்ணம் -என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும் ;
சட்முலகப் பேயை வெல்லும் -நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் .-ஜெப
ஊக்கமுடன் ஜெபம் செய்ய ,-தகா
நோக்கமெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய ,
பேய்க்கண மோடு போர் செய்ய ,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய .-ஜெப