சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்,
சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ்ன் என் ப்வந் தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார் துணை , யாருறவே?
எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்
கைம்மா றுண்டு கொலோ? கடை காருங் கையடையாய்
சும்மாரட்சணை செய், சொல்சுதந்தரம் யாதுமிலேன்,
அம்மான் உன்னை யல்லால் எனக்கார் துணை, யாருறவே ?
திரைசேர் வெம்பவமாம் கடல் மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்க வென்றே புனையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேன் என்னைப் பற்றிய பற்று விடாய்,
அரசே, உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?
தாயே தந்தைதமர் குரு சம்பத்து நட்பெவையும்
நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண்
'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை?
ஆயே ,உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?
துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்
தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக் கொள்ள ,
இப்பா ருய்யவென்றே மனுக் கோல மெடுத்த எங்கள்
அப்பா உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே ?
Monday, March 30, 2009
Saturday, March 21, 2009
இயேசுவின் நாமமே திருநாமம் கீர்த்தனை 83
பல்லவி
இயேசுவின் நாமமே திரு நாமம் -முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
காசினியில் அதனுக் கிணையில்லையே :-விசு
வசித்த பேர்களுக்குக் குறை இல்லியே- இயேசு
இத்தரையில் மெத்தவதி சயநாமம் ;- அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் -இயேசு
உத்தம மகிமை பிரசித்த நாமம்;-இது
சத்திய வீதேய மனமொத்த நாமம் - இயேசு
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்; நமை
அண்டி டும் பேய் பயந்தொடு தேவ நாமம் - இயேசு
பட்சமுள்ள ரட்சை செயு முபகாரி;- பெரும்
பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி- இயேசு
இயேசுவின் நாமமே திரு நாமம் -முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
காசினியில் அதனுக் கிணையில்லையே :-விசு
வசித்த பேர்களுக்குக் குறை இல்லியே- இயேசு
இத்தரையில் மெத்தவதி சயநாமம் ;- அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் -இயேசு
உத்தம மகிமை பிரசித்த நாமம்;-இது
சத்திய வீதேய மனமொத்த நாமம் - இயேசு
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்; நமை
அண்டி டும் பேய் பயந்தொடு தேவ நாமம் - இயேசு
பட்சமுள்ள ரட்சை செயு முபகாரி;- பெரும்
பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி- இயேசு
Subscribe to:
Posts (Atom)